கணவனை கொன்ற மனைவி, அவரது சடலத்துடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டு, கணவனின் ரத்தத்தைக் குடித்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

ரஷியா நாட்டில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி அனைத்து தரப்பு மக்களையும் கடும் பீதியடையச் செய்திருக்கிறது. 

ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கைச் சேர்ந்த ஆண்டி கார்ட்ரைட் என்பவர், தனது மனைவி உடன் வசித்து வந்தார். 

இப்படியான சூழலில் தான், ஆண்டி கார்ட்ரைட் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தனது வீட்டில் மிகவும் கொடூரமான முறையில் படு கொலை செய்யப்பட்டார். 

அத்துடன், படுகொலை செய்யப்பட்ட அவரது உடல் பாகங்களானது, அங்குள்ள ஒரு குளிர்தான பெட்டியில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்தனர். 

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்டமாக விசாரணையில், “ஆண்டி கார்ட்ரைட்டின் மனைவி 37 வயதான மெரினா கோகல் என்ற பெண்ணிடம் போலீசார் தங்களது விசாரணை தொடங்கினார்கள்.

அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், “கணவன் ஆண்டி கார்ட்ரைட், 25 வயதான நாடியா என்ற இளம் பெண்ணுடன் தவறான தொடர்பில் இருந்து வந்திருக்கிறார். 

இதனால், கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனைகள் ஏற்பட்டுக்கொண்டே வந்திருக்கிறது. இப்படியாக, கணவன் - மனைவி இடையே சண்டை அதிகரித்த நிலையில், மனைவி மெரினா கோகல், தனது தாயுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன் படியே, முதலில் கணவனை எப்படி கொல்ல வேண்டும் என்று திட்டமிட்ட அவரது மனைவி, முதலில் கணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து உள்ளார். 

அதன் பிறகு, மனைவி மெரினா கோகல், தனது கணவனின் சடலத்துடன் பாலியல் உறவு கொண்டிருக்கிறார். இந்த பாலியல் இச்சைக்குப் பிறகு, கணவரின் உடலை பல துண்டுகளாக வெட்டி அந்த பெண், கணவனின் ரத்தத்தையும் குடித்ததாகவும் கூறப்படுகிறது. இவை எல்லாவற்றுக்கும் மெரினா கோகலின் தாய் எலெனாவை துணையாக இருந்திருக்கிறார்” என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இதனால், மெரினா கோகலின் மற்றும் அவரது தாய் எலெனாவையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

அதே நேரத்தில், உயிரிழந்தவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையும் வெளியானது. அதனையும், போலீசார் உறுதிப்படுத்திக்கொண்டனர்.

இதனையடுத்து, தாய் மகள் என இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து, அவர்கள் இருவருக்கும் ஜாமீன் கோரி, அங்குள்ள நீதிமன்றத்தில் மெரினா கோகல் மனு தாக்கல் செய்திருந்தார். 

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, மெரினா கோகல் கணவனை கொலை செய்ததான சரியான ஆதாரங்கள் இல்லாததால் அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. எனினும், அவர் இன்னும் போலீசாரின் தொடர் விசாரணையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, கணவனை கொன்ற மனைவி, அவரது சடலத்துடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டு, கணவனின் ரத்தத்தைக் குடித்த சம்பவம் கடும் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.