இந்திய திரைத்துறையின் உயரிய விருதான தாதாசாஹேப் பால்கே விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம்  வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் ரிலீஸாகிறது. முதல் முறையாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள மாஸ்ஸான கமர்ஷியல் திரைப்படமாக அண்ணாத்த வருகிறார்.

சன் பிக்சர்ஸ்  சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜெகபதிபாபு, பிரகாஷ் ராஜ், ஐக்கி ஷெராப், சூரி, ஜார்ஜ் மரியான், சதீஷ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

வெற்றி ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்துள்ள அண்ணாத்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடும் சூப்பர் ஸ்டாரின் அதிரடியான அண்ணாத்த படத்திற்கு திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் புதிய ப்ரோமோ டீசர் வெளியானது. அண்ணாத்த படத்தில் இடம்பெற்றுள்ள சாரல் காற்றே பாடலின் புதிய ப்ரோமோ வீடியோ சற்று முன்பு வெளியானது. சூப்பர் ஸ்டார் - நயன்தாராவின் அழகான புதிய ப்ரோமோ வீடியோ இதோ...