தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் இன்று (நவம்பர் 2ஆம் தேதி) நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி ஒட்டுமொத்த திரை ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தோடு பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தில் லிஜோமொள் ஜோஸ், மணிகண்டன், ராஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். S.R.கதிர் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ள ஜெய்பீம் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

முன்னதாக நேற்று ஜெய்பீம் திரைப்படத்தை பார்வையிட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜெய்பீம் படக்குழுவினருக்கு புகழாரம் சூட்டினார். மேலும் நடிகர் சூர்யா மலைக் கிராமங்களில் வசிக்கும் இருளர் பழங்குடி இன மக்களின் கல்வி நலனுக்காக தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் முன்னிலையில் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று ஜெய்பீம் திரைப்படத்தை பார்வையிட உலகநாயகன் கமல்ஹாசன் படக் குழுவினரை சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெய்பீம் பார்த்தேன்.கண்கள் குளமானது.பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் @tjgnan பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த @Suriya_offl , ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். என தெரிவித்துள்ளார்.