நண்பர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு 300 க்கும் மேற்பட்ட பெண்களின் மார்பகங்களைச் சீண்டி அநாகரிகமாக நடந்துகொண்டிருப்பதாக சமூக வலைத்தளத்தில் இளைஞர் ஒருவர் பெருமை பேசி வசமாக சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பங்கள் பெண்களுக்கு எதிராக அரங்கேறி அனைவரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

பொது இடங்களில் பெண்களுக்கு இன்னும் போதிய பாதுகாப்பு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எல்லாம், சில சம்பவங்களைப் பார்த்தாலோ அல்லது கேள்விப்பட்டாலோ உண்மை என்று தோன்றும். அப்படியான ஒரு அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்தான் கேரளாவில் நடந்திருக்கிறது.

அத்துடன், பொது இடங்களுக்கு வந்து செல்லும் பெண்கள், ஆண்களால் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு எப்படியெல்லாம் கடும் அவஸ்தையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.

அதாவது, கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பெருமை பேசி சுயதம்பட்டம் அடித்துக் கொண்டது தான், பலரையும் கடுமையாக அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

கேரளாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவரான குறிப்பிட்ட இளைஞர் ஒருவர், கிட்டதட்ட 300 க்கும் மேற்பட்ட பெண்களின் மார்பகங்களைத் தொட்டு தவறாக நடந்து கொண்டிருப்பதாகவும், அப்படி தான் பார்க்கும் பெண்களின் மார்பகங்களைத் தொட்டு அவற்றைச் சீண்டிய அநாகரிகமான செயல்கள் குறித்து தனது நண்பரிடம் சமூக வலைத்தளங்களில் பெருமை பேசியது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் தற்போது இணையத்தில் வைரலாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.

இது குறித்து, கேரள இளைஞரின் ஆபாச செல்போன் சாட்டிங் தொடர்பான ஸ்கீரீன்ஷாட்களை பாடகி சின்மயி, தற்போது பகிர்ந்திருக்கிறார்.

அதன்படி, சம்மந்தப்பட்ட அந்த இளைஞர் தனது பெண் தோழியுடன் இன்ஸ்டாவில் சாட்டிங்கில் பகிர்ந்துகொண்டது தான், தற்போது வெளி உலகில் அம்பலமாகி இருக்கிறது. 

அந்த ஆபாச சாட்டிங்கில், “நான் 13 வயதை நிறைவு செய்த பிறகு, பெண்களின் மார்பகங்களைச் சீண்டுபவனாக மாறிப்போனேன். என்னுடைய வாழ்க்கையில் இது வரை 300 க்கும் மேற்பட்ட பெண்களின் மார்பகங்களைச் சீண்டியிருக்கிறேன். 

முக்கியமாக, நான் 8 மணி நேரத்தில் 52 பெண்களின் மார்பகங்களைத் தழுவிய சாதனையும் நிகழ்த்தியிருக்கிறேன். நானும் என் நெருங்கிய நண்பன் ஒருவரும் பெண்களின் மார்பகங்களைப் போட்டிப் போட்டுக் கொண்டு சீண்டி வந்தோம். 

இதெல்லாம், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நடந்தது. இப்படியாக, எங்களுள் யார் அதிக பெண்களிடம் ஆபாசமாகச் சீண்டுகிறார்கள் என்பதை வைத்துத் தான் நாங்கள் எங்களுக்குள் யார் பெரியவன்?” என்பதனை நாங்கள் முடிவு செய்துகொள்வோம் என்றும், இது எங்களுக்கான பெருமையாக நாங்கள் பார்த்து வந்தோம்” என்றும், அந்த இளைஞர் அதில் கூறியிருக்கிறார்.

குறிப்பாக, “இந்த ஆபாச சீண்டல்களை எல்லாம் நாங்கள் ஆசையின் பேரில் செய்ததில்லை என்றும், மாறாக இவையெல்லாம் ஒரு நகைச்சுவைக்காகச் செய்தது தான் என்றும், பெரும்பாலும் எங்களுக்குள் போட்டி ஏற்பட்டால் நான் தான் அதில் சாம்பியன்” என்றும், அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இது, இணையத்தில் தற்போது கடும் அதிர்ச்சியையும், சர்ச்சையும் ஏற்படுத்தியிருக்கிறது.