“கணவருடன் சேர்த்து வைக்கிறோம்” என்று கூறி, 2 பேர் சேர்ந்து பெண்ணை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வழக்கம் போல், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இந்த குற்றச் சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சட்டப்படி விவாகரத்து செய்து உள்ளார். 

திருமணத்திற்குப் பிறகு பல வருடங்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்த அந்த தம்பதிகள், திடீரென்று ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் சட்டப்படி நீதிமன்றத்தை நாடிச் சென்று முறைப்படி விவகாரத்து பெற்றுப் பிரிந்தனர்.

அதன் படி, கணவன் - மனைவி இருவரும் பிரிந்த பிறகு, ஒருவரை ஒருவர் உணர்ந்து உள்ளனர். இதனால், அவர்கள் இருவரும் மீண்டும் சேர விருப்பப்பட்டு உள்ளனர்.

இப்படியான நிலையில் தான், அந்த பெண்ணை மீண்டும் திருமணம் செய்து கொள்ள, அந்த பெண்ணின் கணவர் நினைத்திருக்கிறார். இதனை, அந்த பெண்ணிடமும், அந்த கணவன் தெரியப்படுத்தி இருக்கிறார்.

இந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த 2 பேர், “உங்கள் திருமணம் சட்டப்பூர்வ முறையில் செல்லுபடியாவதற்கு உதவி செய்கிறோம்” என்று கூறி, அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி உள்ளனர். 

இதனை நம்பிய அந்த பெண், அவர்கள் இருவரும் சொல்லப்படியெல்லாம் செயல்பட்டு உள்ளார்.

இதனையடுத்து, அந்த பெண்ணை அந்த பகுதியைச் சேர்ந்த மதபோதகர் உள்பட 3 பேர் சேர்ந்து, அந்த பெண்ணை அங்குள்ள ஒரு தனியார் விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று 3 பேருமாகச் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இந்த சம்பவம் பற்றி தனது சகோதரரிடம் கூறி அந்த பெண் கண்ணீர் வடித்து உள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த சகோதரர், இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ரியாசத் மற்றும் உமைத் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும், இந்த பாலியல் வழக்கில் இருந்து தப்பியோடிய மதபோதகரான சர்ப்ராஸ் என்பவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.