மாமியாருடன் இருந்த கள்ளக் காதல் விவகாரத்தில், மகள் இருக்கும் போதே உல்லாசத்துக்கு கட்டாயப்படுத்திய காரணத்தால் மருமகனை, மாமியாரே கொன்று தற்கொலை நாடகம் ஆடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் தான் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் இருக்கும் கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் 27 வயதான வேல்முருகன் என்பவர், வசித்து வந்தார். 

அதே நேரத்தில் பெரியசாமிக்கு இரு மனைவிகள் உள்ள நிலையில், அதில் முதல் மனைவிக்கு குமுதா என்ற பெண் உள்ளார். 

இதில், குமுதாவின் மகள் பவித்ராவை வேல்முருகனுக்கு திருமணம் செய்து வைத்து உள்ளனர். இதனையடுத்து, பவித்ரா 9 மாத கர்ப்பிணியாக வேப்பூரில் உள்ள தனது அம்மா வீட்டில் தங்கி இருந்து உள்ளார். 

இந்த சூழுலில், கடந்த 28 ஆம் தேதி இரவு தனது மனைவியை பார்த்துவிட்டு வருவதாகக் கூறி வேல்முருகன் வேப்பூர் சென்று இருக்கிறார். அங்கு, மனைவி வீட்டிலேயே அவர் இரவு தங்கியிருக்கிறார்.

இந்த நிலையில், அன்றைய இரவு 11.30 மணி அளவில், குமுதா, வேல்முருகனின் தயாரை செல்போனில் அழைத்து, “தம்பிக்கு உடல் நிலை சரியில்லை” என்று கூறியிருக்கிறார். 

அத்துடன், “வேல்முருகனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதாகவும் கூறியிருக்கிறார்” இதனையடுத்து, அவரது தாய் மலர்கொடி மற்றும் அவரது உறவினர்கள் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். 

அப்போது, வேல்முருகன் இறந்துவிட்டதாக அங்கிருந்த மருத்தவர்கள் கூறியுள்ளனர். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த வேல்முருகனின் தாயார் மலர்க்கொடி, “எனது மகன் இறப்பில் மர்மம் இருப்பதாக” கூறி, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வேல்முருகனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பிரேதப் பரிசோதனையில், வேல்முருகனின் கழுத்து நெறிக்கப்பட்டது அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. 

இதனால், சந்தேகத்தின் பேரில் மனைவி பவித்ரா மற்றும் மாமியார் குமுதாவிடம் போலீசார் தனித்தனியே விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, “குமுதாவுக்கும் வேல்முருகனுக்கும் ஏற்கனவே கள்ளத் தொடர்பு இருந்தது” தெரிய வந்தது.

குறிப்பாக, “அக்கா - தம்பி என்பதால், அக்கம்பக்கத்தினருக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. இதனால், தனது மகளையும் தம்பி வேல்முருகனுக்கு குமுதா திருமணம் செய்து வைத்திருக்கிறார். 

திருமணத்துக்குப் பிறகு, அவர்களது கள்ளக் காதல் உறவு தொடர்ந்து உள்ளது.

இந்த நிலையில், அக்டோபர் 28 ஆம் தேதி மது போதையில் மனைவி பவித்ராவை பார்க்க வேல்முருகன் சென்ற போது, “கணவன் - மனைவி இருவரும் ஒரு அறையில் படுத்து உறங்கியபோது, பக்கத்து அறையில் குமுதா தூங்கிக்கொண்டு இருந்து உள்ளார். 

அப்போது, நள்ளிரவு நேரத்தில் குமுதாவின் அறைக்குச் சென்ற வேல்முருகன், உல்லாசமாக இருக்க வேண்டும் என்று அவரை அழைத்து உள்ளார். அப்போது, அவரோ, “பக்கத்து அறையில் மகள் படுத்து உறங்குவதால், இப்போது வேண்டாம்” என்று, அவர் மறுத்து இருக்கிறார்.

அப்போது, அவர் மது போதையில் இருந்த காரணத்தால், குமுதாவை விடாமல் தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார். 

அப்போது குமுதா வேல்முருகனின் கழுத்தில் கை வைத்து கீழே தள்ளி விட்டுள்ளார். இதில், நிலைகுலைந்து கீழே விழுந்த வேல்முருகன், அதன் பிறகு பேச்சு மூச்சு இல்லாமல் அப்படியே கிடந்து உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த குமுதா, வேல்முருகன் உடலைத் தூக்கில் கட்டி தொங்கவிட்டு தற்கொலை நாடகம் நடத்தி இருக்கிறார். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.