“காதலிக்கும் போதே குழந்தையும் பெற்று எடுத்துவிட்டு ஆனால் கல்யாணம் மட்டும் செய்யாமல் காலம் தாழ்த்துவதால் ஆத்திரமடைந்த காதலி நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாம்பியா நாட்டில் தான், இப்படி ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறி உள்ளது.

சாம்பியா நாட்டில் கெர்ட்ரூட் கோமா என்ற இளம் பெண், அதே நாட்டைச் சேர்ந்த ஹெர்பர்ட் சலலிகி என்ற இளைஞரை காதலித்து உள்ளார். அந்த இளைஞரும், இந்த இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இப்படியாக, இவர்களது காதல் வாழ்க்கை சுமார் 8 ஆண்டுகள் கடந்திருக்கிறது. இந்த 8 ஆண்டு கால காதல் வாழ்க்கையில், காதலர்கள் இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று ஒரு உல்லாச வாழ்க்கையே வாழ்ந்து வந்துள்ளனர்.

இப்படியே, இவர்களது உல்லாச வாழ்க்கை கடந்த 8 ஆண்டுகளாக சென்றுகொண்டிருந்த நிலையில், இருவரும் இணை பிரியா அன்பை ஒருவர்மீது ஒருவர் வெளிப்படுத்தியுள்ளனர். 

அதே நேரத்தில், இவர்களது காதலின் பரிசாக அந்த இளம் பெண்ணுக்கு ஒரு அழகான குழந்தையும் பிறந்துள்ளது. 

அத்துடன், காதன் ஹெர்பர்ட் தனது காதலி கெர்ட்ரூட் கோமாவிடம் வரதட்சணையும் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் திருமணத்திற்குத் தேவையான பணம் காதலன் ஹெர்பர்ட்டிடம் தற்போது இல்லை என்றும் கூறப்படுகிறது.

முக்கியமாக, இருவரும் ஒருவரை ஒருவர் அதிகம் நேசித்து வந்தாலும், காலன் ஹெர்பர்ட் சலலிகி, காதலியை திருமணம் செய்யும் விசயத்தில் மட்டும் பெரிதாக ஈடுபாடு காட்டாமல், அந்த திருமணத்தை தொடர்ச்சியாகத் தவிர்த்து வந்துள்ளார்.

காதலி, திருமண பேச்சு எடுக்கும் போதெல்லாம், அது பற்றி பேச விரும்பாத காதலன், காதலியுடன் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டே இருந்து உள்ளார். 

ஆனாலும், அவர்களுக்குள் திருமணம் என்னும் ஒரு விசயத்தைத் தாண்டி, வேறு எதற்கும் சண்டை வந்ததே இல்லை என்று கூறப்படுகிறது. அதையும் தாண்டி, காதலி திருமண பேச்சை எடுக்கும் போதெல்லாம் அடுத்த மாதம், அடுத்து, வாரம், என்று, இப்படியே பல வருடங்களை அவர் தள்ளிக்கொண்டு சென்றுள்ளார். இதனால், காதலன் ஹெர்பர்ட் மீது ஒரு கட்டத்தில் கடும் கோபம் அடைந்த காதலி கெர்ட்ரூட், இந்த விவகாரத்தை அந்நாட்டின் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று உள்ளார்.

இது தொடர்பாக, காதலி கெர்ட்ரூட், தன் காதலன் ஹெர்பர்ட் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு தற்போது, அந்நாட்டின் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இரு தரப்பு விளக்கத்தையும், நீதிபதி கேட்டறிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த 8 வருடங்களாகக் காதலித்து விட்டு, காதலி குழந்தையும் பெற்றெடுத்த நிலையில், காதலன் கல்யாணத்தை மட்டும் தள்ளிப்போட்டுக்கொண்டே, காலம் தாழ்த்தி வருவதால் ஆத்திரமடைந்த காதலி, காதலன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நாட்டில், இந்த நிகழ்வு பேசும் பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.