மிகவும் சுவாரஸ்யமான புதிய மனிதா என்ற ரோபோ டாஸ்க் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிய வேண்டும். ஒன்றோ ரோபோக்களாக இருக்க, மற்றவர்கள் அவர்களை சிரிக்க, அழவைக்க முயற்சிக்கும் மனிதர்கள் டீமாக இருக்க வேண்டும் என சொல்லப்பட்டது.ரோபோக்களை சிரிக்க வைக்க மற்றும் அழ வைக்க மனிதர்கள் டீம் பல விஷயங்களை செய்தனர். 

அதன் பின் இரண்டாம் நாளான நேற்று அணிகள் மாற்றப்பட்டு டாஸ்க் நடைபெற்றது. அதில் அர்ச்சனா கேங் நிஷா மற்றும் பாலாஜியை எளிதில் சிரிக்கவைத்து ஜெயித்து காட்டினர். இன்றைய எபிசோடில் போட்டியாளர்கள் அனைவரும் சுவாரஸ்யம் குறைவான போட்டியாளரை தேர்ந்தெடுத்து சொல்ல வேண்டும் என சொல்லப்பட்டது. அதனால் ஒவ்வொருவராக வந்து கருத்துக்களை சொல்கின்றனர். 

பெரும்பாலானவர்கள் ஆரி மற்றும் அனிதா சம்பத் ஆகியோர் பெயரை தான் சொல்லி இருக்கின்றனர். அவர்கள் இருவர் தான் இந்த வாரம் ஜெயிலுக்கு போகப் போகிறார்கள் என தெரிகிறது. தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், யாரும் கோர்த்து விடல அனிதா என்று நிஷா மற்றும் ரியோ விளக்குகிறார்கள். இது பர்சனல் ரீசன் கிடையாது, கேம் ரீசன் தான் என்று ஆரம்பிக்கிறார் அனிதா. 

இதை கேபி, ரமேஷ் மற்றும் ஆஜீத் சேர்ந்து வேடிக்கை பார்கின்றனர். ரம்யா மற்றும் ஷிவானி அச்சத்தில் உள்ளனர், அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று. பின்னர் ஐடியாக்களை யார் வழங்கியது என்ற பஞ்சாயத்து கிளம்புகிறது. அப்போது பேசிய நிஷா, Bossy மற்றும் puppet போன்ற ஐடியாக்களை நான் தந்தனா ? என்ற கேள்வியை முன்வைக்கிறார். 

அனிதா நீங்க என்ன முயற்சி பண்றீங்க என்று ரியோ கேட்க, அதை கண்டுகொள்ளாமல் நிஷாவிற்கு பதில் தருகிறார் அனிதா. சண்டைக்கு நடுவே சமாதானப்படுத்த சென்ற பாலாஜியை, டேய் இரு டா... என்று அதட்டுகிறார் நிஷா. இது பிக்பாஸ் ரசிகர்களுக்கு நிஷா மீது சற்று வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்செப்ட் வேண்டாம் என்று ஏன் பெயர் வைக்கிறீர்கள் என்று அனிதா தன் பக்கம் கேள்விகளை எழுப்புகிறார். இந்த வார எவிக்ஷன் கூடுதல் சிறப்பாக இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் பிக்பாஸ் பிரியர்கள்.