பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்களைத் தடுக்க மகாராஷ்டிரா அரசு ‘ சக்தி சட்ட’ வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் குற்றங்களை செய்வோருக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளை விதிக்கப்படும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்திருக்கிறது. 


கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா அளவில் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களைத் தடுப்பதற்காக ஆந்திரா அரசு திஷா சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை தழுவி இப்போது மகாராஷ்டிரா அரசு ‘சக்தி சட்ட’ மசோதாவை கொண்டு வந்திருக்கிறது. 


சக்திச் சட்ட மசோதாவின்படி ஒரு வழக்கில் 15 நாட்களுக்குள் விசாரணையை முடிக்கவும், 30 நாட்களுக்குள் வழக்கினை முடிக்க வேண்டும். சக்திச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளைக்கு 36 சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும் மற்றும் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு அரசு வக்கீல் நியமிக்கப்படுவார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபதார தொகை குற்றவாளியிடமிருந்து வசூலித்து கொடுக்கப்படும். ஐபிசி, சிஆர்பிசி மற்றும் போக்ஸோ சட்டம் தொடர்புடைய பிரிவுகளைத் திருத்தங்கள் கொண்டு வரப்படும் எனவும், மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்பு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்படும் என மகாராஷ்டிரா அரசு கூறியிருக்கிறது.