தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சன் பிக்சர்ஸ் நிறுவனம்.சன் தொலைக்காட்சி குடும்பத்தில் இருந்து வந்த இந்த நிறுவனம் முதலில் படங்களை விநியோகம் செய்வது மட்டுமே செய்து வந்தது.இவர்கள் விநியோகம் செய்யும் படங்களுக்கே ப்ரோமோஷன்கள் பறக்கும்.தங்கள் முதல் தயாரிப்பாக எந்திரன் படத்தை தயாரித்தனர் சன் பிக்சர்ஸ்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவான இந்த படம் அமோக வெற்றியை பெற்றது.பின்னர் சில வருடங்கள் படத்தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்கள் இரண்டாவது தயாரிப்பை 2018-ல் அறிவித்தனர்.தளபதி-விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாரான இந்த படம் வசூல் சாதனை நிகழ்த்தியது.

இதனை அடுத்து 2019-ல் பேட்ட,நம்ம வீட்டு பிள்ளை என்று இரண்டு பெரிய படங்களை தயாரித்து அசத்தினர் சன் பிக்சர்ஸ்.இதனை அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தை தயாரித்து வந்தனர்.கொரோனா காரணமாக இந்த ஷூட்டிங் தாமதமாகியுள்ளது.

கொரோனா நேரத்திலும் அடுத்தடுத்து படங்களை அறிவித்து வந்தனர் சன் பிக்சர்ஸ் தனுஷ் நடிக்கும் D44,சூர்யா நடிப்பில் சூர்யா 49dZFkcrKdk7XegyMd3kp4MGQoLFeMWM6Lion2T3q3h6DScBViFrXXuZoxkHq1TB1mGufMoGzfXd7jJ7ocgpJGxdEiGirjGக்சர்ஸ் தயாரிக்கவுள்ளனர்.இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் மெகா அறிவிப்பு வெளியிடுவதாக ஒரு ட்வீட் செய்துள்ளனர்.அதில் நான்கு தேதிகள் குறிப்பிடப்பட்டு உள்ளன இன்று,நாளை,ஞாயிற்றுக்கிழமை மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.இதனை வைத்து பார்க்கும்பொழுது சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அவை என்னென்னவாக இருக்கலாம் என்று  நமக்கு கிடைத்த தகவல்களை வைத்து பார்க்கலாம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த : டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாள் வருவதால்  படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியிடப்படலாம் அல்லது ஷூட்டிங் அப்டேட் அல்லது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷின் D44 : ஏற்கனவே அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்ற தகவலை வெளியிட்ட சன் பிக்சர்ஸ், இந்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல் அல்லது ஷூட்டிங் குறித்த தகவலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா 40 : சூர்யா பாண்டிராஜ் இணையும் இந்த படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 65 : விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாகவுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படம் குறித்த அறிவிப்பாகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல அறிவிப்புகளை சன் பிக்சர்ஸ் வெளியிடவுள்ளார்களா அல்லது ஒரே அறிவிப்பு தான் வெளியாகவுள்ளதா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.ஆனால் என்னவாக இருந்தாலும் சினிமா ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு அமையப்போகிறது.