உக்ரைன் தலைநகரான கீவ்வை ரஷ்ய படைகள் நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் கிட்டதட்ட தாக்குதல்களை தொடர்ந்து வரும் நிலையில், அந்நாட்டில் இருந்து கிட்டதட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

இந்த சூழலில் தான், கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பதில் தாக்குதலை உக்ரைன் ரானுவம் தீவிரப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், இன்றைய தினம் உக்ரைனில் 16 வது நாளாக ரஷ்ய படைகள் மிக கடுமையான அளவில் தாக்குதல் நடத்தி வருகிறது. 

அத்துடன், உக்லைன் தலைநகரான கீவினை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யாவின் தரைப்படையினர் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் முதலில் தகவல்கள் வெளியானது. இதனால், பல இடங்களில் அங்கு வான்வழி தாக்குதல் நடத்த ரஷ்ய படைகள் திட்டமிட்டு உள்ளதாகவும் உக்ரைனின் முக்கிய நகரங்களில் பதற்றம் முன்பை விட தற்போது பன்மடங்கு அதிகரித்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், கடுமையான தாக்குதல் நடத்தியபடி ரஷ்ய தரைப்படையினர் உக்ரைன் கீவ் நகரத்தை நோக்கி முன்னேறும் காட்சிகளை அந்நாட்டு ராணுவம் முன்னதாக வெளியிட்டது. 

அதன் படி, தனது வலிமையான படைகள் மூலம் உக்ரைனை எளிமையாக வீழ்த்தலாம் என்ற ரஷ்யாவின் எண்ணத்தை உக்ரைன் படையினர் பொய்யாக்கி வருகிறார்கள் என்பது தொடர்பாக அந்நாட்டின் பல இடங்களில் ரஷ்ய படைகளுக்கு தக்க பதிலடியை உக்ரைன் படையினர் அளித்து வருகின்றனர். 

அந்த வகையில், உக்ரைன் போர் படை வீரர்கள், ரஷ்ய கவச வாகனங்களை வெடிகுண்டு வீசி அழிப்பதும் மற்றும் அவற்றை கைப்பற்றி தங்கள் வசமாக்கி வருவது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

அதே போல், உக்ரைன் நாட்டில் உள்ள ஒடேசாவில் உள்ள கருங்கடல் துறைமுகத்தின் மீது, ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தும் என்று கூறப்படுவதால், அப்பகுதியில் உக்ரைன் படைகள் குவிக்கப்பட்டு உள்ளன. 

அதே போல், போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்காமல் உக்ரைன் நாட்டு மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனினும், ரஷ்யாவிற்கு உக்ரைன் ஈடுகொடுத்து வருகிறது.

இந்த நிலையில் தான், உக்ரைன் எதிர் தாக்குதல்களை முறியடித்து, ரஷ்ய போர் படைகள் பல நகரங்களில் ஏவுகணை, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என கடும் தீவிரமாக்கி வருகின்றனர்.

முன்னதாக, உக்ரைன் தலைநகரான கீவ் வை ரஷ்ய படைகள் நெருங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

குறிப்பாக, கீவ் நகருக்கு அருகில் சுமார் 64 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரஷ்ய படைகளின் ராணுவ வாகனங்கள் அணி வகுத்து நிற்பது தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் தற்போது இதனை உறுதி செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.