விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. வழக்கம்போல் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியும் காரசாரமான விவாதங்களும் கலகலப்பும் நிறைந்திருந்தது.

அனேக மக்களின் மனதை கொள்ளையடித்த நடிகர் ராஜூ ஜெயமோகன் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற, முன்னணி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இதனை அடுத்து 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த முக்கிய போட்டியாளர்களில் ஒருவர் ஐக்கி பெர்ரி. தமிழ் சுயாதீன ராப் இசைக் கலைஞரான ஐக்கி பெர்ரி எழுதி பாடி நடித்துள்ள புதிய "ராணி" பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ராணி பாடலுக்கு தேவ் மேஜர் இசையமைத்துள்ளார்.

திங்க் மியூசிக் வெளியிட்ட இப்பாடலை ஐக்கி பெர்ரி மற்றும் திருமலை இணைந்து எழுத, ஐக்கி பெர்ரி திருமலை மற்றும் ஜே ஸ்டெல்லார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இன்று (மார்ச் 10ஆம் தேதி) யூடியூபில் வெளியான பிக் பாஸ் ஐக்கி பெர்ரியின் ராணி பாடல் சமூகவலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கலக்கலான அந்த மியூசிக் வீடியோ இதோ…