தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக ரசிகர்களுக்கு தொடர்ந்து கலக்கலான என்டர்டெய்னிங் படங்களை வழங்கி வரும் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கடைசியாக கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் மாநாடு. நடிகர் சிலம்பரசன் TR கதாநாயகனாக நடித்து வெளிவந்த மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது.

இதனையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் மன்மத லீலை. நடிகர் அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கும் மன்மதலீலை திரைப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் மற்றும் சம்யுக்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மன்மத லீலை(A Venkat Prabhu Quickie) படத்திற்கு நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார்.  

ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிளாக் டிக்கெட் கம்பெனி இணைந்து வழங்கும் மன்மத லீலை படத்திற்கு தமிழ் அழகன் ஒளிப்பதிவில் வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்கிறார்.  வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி ரிலீசாக உள்ள மன்மதலீலை திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தயாராகி வரும் மன்மதலீலை திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் மன்மத லீலை திரைப்டத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் கீழே உள்ள லிங்கில் காணலாம்.