இந்திய திரையுலகில் மிக முக்கிய நடிகராக விளங்கும் நடிகர் தனுஷ் முன்னதாக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கதில் நடித்த மாறன் திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இன்று (மார்ச் 11) மாலை 5 மணிக்கு ரிலீஸாகிறது. தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். 

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளிலும் தனுஷ் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பட இயக்குனர்கள் ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தி க்ரே மேன் திரைப்படம் நிறைவடைந்து விரைவில் நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் ரிலீஸாகவுள்ளது.

மேலும் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிவரும் வாத்தி (SIR) படத்தில் நடித்து வரும் தனுஷ் மீண்டும் தனது சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இணைந்துள்ள திரைப்படம் நானே வருவேன். இப்படத்தில் நடிகை இந்துஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தயாரிப்பில் ஹீரோ - வில்லன் என இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.இதில் ஒரு கதாபாத்திரத்திற்காக நடிகர் தனுஷ் வில்வித்தை பயின்று வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.  ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில்  சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நானே வருவேன் படப்பிடிப்பு தளத்தில் தனுஷுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள செல்வராகவன், “நாம் எதிர்பார்ப்பதை தாண்டி சிறந்த நடிப்பை ஒரு நடிகர் வெளிப்படுத்தினால்... அதுதான் மகிழ்ச்சி!” என குறிப்பிட்டுள்ளார். நடிகர் தனுஷின் நடிப்பை புகழ்ந்துள்ள செல்வராகவனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அந்த பதிவு இதோ…