அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது அஜித்குமாரின் வலிமை திரைப்படம். சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்டபார்வை படங்களின் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை படத்தில் அஜித் குமார் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் போனி கபூரின் பே பியூ பிராஜக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கிய வலிமை திரைப்படத்தில் அஜித் குமாருடன், ஹூமா குரேஷி, சுமத்ரா, விஜய் டிவி புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க மிரட்டலான வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திக் நடித்துள்ளார். 

நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்பராயன் பணியாற்றியுள்ளார்.  கடந்த பிப்ரவரி 24ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான வலிமை திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று மெகாஹிட் பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது.

இந்நிலையில் வலிமை க்ளைமாக்ஸில் இடம்பெறும் பைக் ஸ்டன்ட் காட்சியின் ஷூட்டிங் ஸ்பார்ட் வீடியோ வெளியானது. ஒரு பெரிய பாலத்தில் நடைபெறும் அந்த படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் ட்ரோனை(Drone) இயக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. வைரலாகும் அந்த வீடியோ இதோ…