தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும்,‘’ சிகிச்சை பலனின்றி 9 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 4 பேர் மற்றும் அரசு மருத்துவமனயில் 5 பேர் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,618 ஆக அதிகரித்துள்ளது.


அதிகபட்சமாக சென்னையில் 532 பேருக்கும், செங்கல்பட்டில் 149 பேருக்கும், கோவையில் 146 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து 902 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 8,48,041 பேர் கொரோனாவிலிருந்து விடுப்பட்டு வீடு திரும்பி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் 8,69,804 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.