நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நடத்தமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை  5 மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. 


இதைப்பற்றி சுகாதாரத் துறை விஜயபாஸ்கர், ‘’ தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை சென்னை, திருவள்ளூர், நெல்லை, கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் நடத்தப்பட இருக்கிறது. நாளை 2 மணி நேரத்தில் 25 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக செவிலியர்கள் உள்பட 21,170 சுகாதாரப் பணியாளர்களுக்கு இதற்கான பயிற்சி வழங்கப்பட்டு இருக்கிறது” என்று தெரிவித்து இருக்கிறார். 

மேலும் , ‘’ தற்போதைய காலகட்டத்தில் கொரோனா நோயின் எண்ணிக்கை ஆயிரத்துக்குள் குறைந்துள்ளதாகவும், அதேபோல் உருமாறிய கொரோனா 44 நபர்களில் ஒருவருக்கும் மட்டுமே இருப்பதாகவும், மீதமுள்ளவர்களுடைய பரிசோதனை முடிவுகள் நிலுவையில் உள்ளதாக’’ சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.