வருடா வருடம் திரைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கௌரவப்படுத்தும் விதமாக தேசிய விருதுகள் கொடுக்கப்பட்டு வந்தன.கடந்த வருடம் நடக்கவிருந்த தேசிய விருதுகள் அறிவிக்கும் விழா கொரோனா காரணமாக தள்ளிப்போனது.இதன் முடிவுகளை ஒரு வருடம் கழித்து தற்போது அரசு வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியாவின் பல மொழிகளை சேர்ந்த பல கலைஞர்கள் வெற்றிவாகை சூடி பல விருதுகளை குவித்துள்ளனர்.இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல கலைஞர்களும் இந்த வருடத்தின் தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளனர்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படம் தமிழின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.தனுஷ் இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார்.சிறந்த துணை நடிகருக்கான விருதினை சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்து அசத்திய விஜய்சேதுபதி வென்றுள்ளார்.

விஸ்வாசம் படத்தின் பாடல்களுக்காக டி இமான் இந்த சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார்.பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படம் சிறப்பு விருதினை வென்றுள்ளது.இந்த படத்தின் ஒலிப்பதிவுக்காக ஒரு தேசிய விருதும் வென்றுள்ளனர்.கே டி என்ற கருப்புத்துரை படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமாக நடித்த நாகவிஷால் சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்ந்ததுக்கப்பட்டுள்ளார்.இவர்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.