பெண் வேட்பாளரான தனக்கு ஆபாசப் படம் அனுப்பியதால், ஆத்திரமடைந்த அவர் “ஆபாசப் படம் அனுப்பியவரைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், நானே கண்டுபிடித்து பொது மக்கள் முன்னிலையில் அவரின் பிறப்புறுப்பை அறுப்பேன்” என்று, வீரலட்சுமி வீர வசனம் பேசியது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் கி.வீரலட்சுமி தான், போலீசாரிடம் இப்படி ஒரு வீர வசனத்தைப் பேசியிருக்கிறார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் கி.வீரலட்சுமி, தமிழர் முன்னேற்றப் படை என்கிற அமைப்பின் நிறுவனராக இருந்து வருகிறார். 

இவர், சென்னை பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் “மை இந்தியா பார்ட்டி” சார்பில், தேர்தலில் இந்த முறை போட்டியிடுகிறார். கடந்த முறை தேர்தலிலும், இவர் தேர்தலில் வேட்பாளராகக் களம் கண்டார்.

இந்த நிலையில், வீரலட்சுமி சென்னை பம்மலில் தேர்தல் பரப்புரையில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இவரிடம், தெரியாத ஒரு செல்போன் எண்ணில் இருந்து ஆபாச வீடியோக்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த பெண் வேட்பாளர் கி.வீரலட்சுமி, இது குறித்து அங்குள்ள சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென்று “எனக்கு செல்போனில் ஆபாச வீடியோ அனுப்பிய நபரை இன்னும் 3 நாட்களில் போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும், அப்படி கைது செய்யவில்லை என்றால், நானே சம்மந்தப்பட்ட அந்த நபரை கண்டு பிடித்து, தூக்கிட்டு வந்து நிர்வாணமாக பல்லாவரம் சந்தையில் கட்டி வைத்து, அவரின் பிறப்புறுப்பை அறுத்து, அதனை சமூக வலைதலைத்தில் வீடியோவாக வெளியிடுவேன்” என்று, ஆவேசமாகப் பேசி வீடியோ ஒன்றையும் வீரலட்சுமி தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்து உள்ளார்.

போலீசாரை எச்சரிக்கும் தோணியில் இருக்கும் அந்த வீடியோவானது போலீசாரின் கவனத்திற்கும் சென்று உள்ளது. இதனால், தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் நிறுவனருமான கி.வீரலட்சுமி பேசி உள்ள இந்த வீடியோ தொடர்பாக அடுத்து என்ன செய்ய வேண்டாம் என்று போலீசார் தங்கள் தரப்பில் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, பெண் வேட்பாளரும், தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் நிறுவனருமான கி.வீரலட்சுமி, பேசி உள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.