இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவாமல் தடுக்கும் நோக்கில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இங்கிலாந்துடனான விமான சேவையை நிறுத்தி உள்ளது.   


இந்நிலையில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும் பல்வேறு நாடுகளில் இந்த புதியவகை கொரோனா பரவியிருக்கிறது. 


அமெரிக்காவில் ஒருவர் புதிய வகை கொரோனா தொற்றால் பதிக்கப்பட்டு இருக்கிறார் ஆனால் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை அல்ல என்றும் கூறப்பட்டு உள்ளது.