விஷால் - SJசூர்யாவின் 'மார்க் ஆண்டனி'யில் சில்க் ஸ்மிதா... பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் ட்ரீட் உறுதி! கலக்கலான ட்ரெய்லர் இதோ

விஷால் - SJசூர்யாவின் மார்க் ஆண்டனி பட ட்ரெய்லர் வெளியீடு,vishal sj suryah in mark antony movie trailer out now  | Galatta

விஷால் மற்றும் S.J.சூர்யா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் மிரட்ட பக்கா ஆக்சன் என்டர்டெய்னராக  வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. தமிழ் சினிமாவின் முன்னணி அதிரடி ஆக்சன் கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் #விஷால்34 படத்தில் நடித்து வருகிறார். தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது வெற்றி படம் கொடுக்க விஷால் - ஹரி கூட்டணி இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இயக்குனராக களமிறங்கும் நடிகர் விஷால் விரைவில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். 

அதேபோல் மறுபுறம் SJ.சூர்யா அவர்கள் தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிஸியான நடிகராக பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்குனர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்த தயாராகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அடுத்து நடிகர் தனுஷ் தனது 50வது படமாக இயக்கி நடிக்கும் D50 படத்திலும் சூர்யா நடிக்க இருப்பதாக தெரிகிறது இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெகு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா நடித்திருக்கும் ஜிகர்தண்டா திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. 

இதனிடையே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் SJ.சூர்யா இணைந்து முனனணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மினி ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய, மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

டைம் டிராவல் கான்செப்ட்டை கொண்டு 1960 காலகட்டத்தை கதைக்களமாக கொண்ட வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக மார்க் ஆண்டனி படம் 2023ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி வெளியீடாக  வரும் செப்டம்பர் 15ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தின் பக்கா மாஸ் ட்ரெய்லர் வெளியானது. ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடும் வகையில் எல்லா கமர்சியல் விஷயங்களும் நிறைந்து இருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் சர்ப்ரைஸாக  தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகையான சில்க் ஸ்மிதாவை CGI முறையில் பட குழுவினர் கொண்டு வந்திருக்கின்றனர் என தெரிகிறது. ட்ரெய்லரின் சில்க் ஸ்மிதா இடம் பெற்றிருக்கும் காட்சி தற்போது பலரையும் கவர்ந்துள்ளது. பக்கா எண்டர்டெய்னராக ரசிகர்களை கவர காத்திருக்கும் மார்க் ஆண்டனி பட ட்ரெய்லர் இதோ…