Netflix – ல் முதலிடம் பிடித்து மாஸ் காட்டும் மாரி செல்வராஜின் மாமன்னன்..! – தொடர்ந்து டிரெண்டிங்கில் ஃபகத் ஃபாஸில்..

நெட்ப்ளிக்ஸில் இந்தியாவில் முதல் இடம் பிடித்த மாரி செல்வராஜின் மாமன்னன்  - Mari selvaraj Maamannan trending in Netflix | Galatta

கடந்த ஜூன் 29ம் தேதி இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உலகமெங்கும் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’. அழுத்தமான கதைகளை நேர்த்தியான திரைக்கதை மூலம் கொடுத்து தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற மாரி செல்வாஜ் பரியேரும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களுக்கு பின் இயக்கிய மாமன்னன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருந்து வந்தது. மாறுபட்ட கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க புரட்சி கரமான கதாபாத்திரத்தில் படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஒருபுறம் அழுத்தமான கதாபாத்திரத்தில் இதுவரை கண்டிராத நடிப்பில் வைகை புயல் வடிவேலு அசத்த மிரட்டலான வில்லனாக ஃபகத் ஃபாஸில் நடித்துள்ளார்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய ஆர்கே செல்வா படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இவரது இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. படத்தின் அமைந்துள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று டிரெண்டாகி வருகிறது.

ரசிகர்களின் பேராதரவுடன் வெளியான மாமன்னன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பு அளித்து மிகப்பெரிய வெற்றியை இப்படத்திற்கு தந்தனர். தமிழுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து மாமன்னன் திரைப்படம் ‘நாயகுடு’ என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது. இதையடுத்து தெலுங்கிலும் வெற்றியை உறுதி செய்தது மாமன்னன். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்ற மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூலை  27ம் தேதி பிரபல ஒடிடி தளமான நெட்பிளிக்ஸில் இந்திய மொழிகளில் வெளியானது.

உலகளாவிய ரசிகர்களின் வரவேற்பையடுத்து மாமன்னன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் அனைத்து மொழிகளிலும் முதல் இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பினை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வைரலாகி வருகிறது. மேலும் படத்தில் மிரட்டலான வில்லனாக வரும்  ஃபகத் ஃபாஸிலை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

படத்தில் அடக்குமுறையை கையாண்டு கொடூரமான வில்லனாக வரும் ஃபகத் ஃபாஸிலை ரசிகர்கள் கொண்டாடி வருவது ஆச்சர்யத்தை தந்துள்ளது. பொதுவாகவே ஃபகத் ஃபாஸிலின் நடிப்பு அனைத்து மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திழுத்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி அவருடைய நடிப்பினை ரசிகர்கள் வேறுவிதமாக கொண்டாடுவது படத்தில் மாரி செல்வராஜ் சொல்ல வந்த கருத்தை நீர்த்து போக செய்துள்ளதாக பேசப்படுகிறது. கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தை ரசிக்க வைத்த ஃபகத் ஃபாஸிலை தற்போது ரசிகர்கள் 3 நாட்களாக கொண்டாடி வைரலாக்கி வருகின்றனர்.  

 

Even those drops of blood that were shed rejoice #Maamannan

Trending #1in India on #Netflix #MaamannanBlockbuster @Udhaystalin @RedGiantMovies_ @KeerthyOfficial #Vadivelu @arrahman #FahadhFaasil @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah @kalaignartv_offpic.twitter.com/wRlcBXJEej

— Mari Selvaraj (@mari_selvaraj) July 30, 2023

என் ரோஜா நீயே, ஆரத்யாவை தொடர்ந்து அட்டகாசமான பாடலை வெளியிட்ட சமந்தா - விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’  படக்குழு.. – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

என் ரோஜா நீயே, ஆரத்யாவை தொடர்ந்து அட்டகாசமான பாடலை வெளியிட்ட சமந்தா - விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படக்குழு.. – வைரல் வீடியோ உள்ளே..

“தல சொல்லாதடா AK னு சொல்லு..” அலப்பறையை தொடங்கிய சந்தானம்.. – சர்ப்ரைஸாக வெளியான ‘DD returns’ படத்தின் சிறப்பு காட்சி..
சினிமா

“தல சொல்லாதடா AK னு சொல்லு..” அலப்பறையை தொடங்கிய சந்தானம்.. – சர்ப்ரைஸாக வெளியான ‘DD returns’ படத்தின் சிறப்பு காட்சி..

சினிமா

"1000 பெண் டான்ஸர்களுக்கு நடுவில் ஷாரூக் கான்"- அட்லீயின் ஜவான் பட விஷுவல் ட்ரீட் குறித்த ருசிகர தகவல் இதோ!