“அஜித் சாரை Hair colour பண்ணுங்கனு அப்போ என்னால சொல்ல முடியல..” வீரம் திரைப்படம் குறித்து தமன்னா பகிர்ந்த தகவல் – Exclusive Interview உள்ளே..

அஜித்தின் வீரம் திரைப்படம் குறித்து நடிகை தமன்னா பகிர்ந்த தகவல் – Actress tamannaah about ajith veeram movie | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை தமன்னா. அஜித், விஜய், கார்த்தி, சூர்யா, ரஜினி, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் இந்தியில் வெளியான ஜி கர்த்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2  ஆகிய தொடர்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று நாடு முழுவதும் தமன்னா பரவலாக பேசப்பட்டு வருகிறார். இப்படத்தை தொடர்ந்து தற்போது தமன்னா நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கிய இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 10 ம் தேதி வெளியாகவுள்ள ஜெயிலர் படம் குறித்தும் தனது திரைப்பயணம் குறித்தும் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் நடிகை தமன்னா அவர்கள் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் அஜித் குமார் நடித்து பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த வீரம் திரைப்படத்தில் அஜித் குமாரின் கதாபாத்திரம் இரண்டாம் பாதியில் நடிகையின் கதாபாத்திரத்திற்கு இணையாக ‘Salt & pepper Look’ ஐ மாற்றி இன்னும் இளமையாக வந்திருக்கலாம் என்று நீங்கள் இயக்குனரிடம் கேட்டதுண்டா என்று கேட்கையில்,

"இப்போ அவர்கிட்ட தலைக்கு டை அடிக்க சொல்லி கேட்கலாம். ஆனா அந்த நேரம் என்னோட திரைப்பயணத்தின் ஆரம்ப காலக்கட்டம் அதனால் அதை கேட்க முடியாது. அதை சொல்லக்கூடிய இடத்திற்கு  ஒரு நடிகரா வருவது அது ரொம்ப முக்கியம்.

திரைத்துறையில் சில பேர் ஓப்பனாக பேசுவார்கள்‌. சில இயக்குனர்கள் ஓப்பனா பேசுவதற்கான இடம் கொடுக்கிறார்கள். சிலர் அதை கொடுக்க மாட்டார்கள்.. அதனால் உங்களுக்கு பேச இடம் இல்லாத இடத்தில் ஒரு கருத்தை சொல்ல வாய்ப்பு கிடைக்காது. 

ஆனால் இன்று நான் வேலை செய்ய விரும்பும் ஆட்கள் அந்த படத்திற்கான ஒத்துழைப்பை அனைவரிடமிருந்தும் பெற வேண்டும் என்று நினைக்கிறேன். வீரம் படம் எனது ஆரம்ப கால கட்டம் என்பதால் அதை சொல்ல முடியவில்லை.." என்றார் நடிகை தமன்னா..

கடந்த 2014ல் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘வீரம்’ பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் திரைப்படமாக அஜித் குமார் நடிப்பில் உருவான இப்படம் பட்டி தொட்டி எங்கும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அஜித் குமாருடன் இணைந்து, தமன்னா, சந்தானம், நாசர், விதார்த், பால முருகன், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய அளவு உலகளவில் பெற்று கொண்டாடப்பட்டது. ஆரவாரத்துடன் பொங்கல் பண்டிகையின் போது  வெளியாகி வசூலை அள்ளியது வீரம் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகை தமன்னா நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் தனது திரைப்பயணம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ உள்ளே..

 

 

ஜிவி பிரகாஷுக்கு பதில் இளையராஜா..! பிரபல இயக்குனரின் திரைப்படத்தில் திடீர் மாற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..
சினிமா

ஜிவி பிரகாஷுக்கு பதில் இளையராஜா..! பிரபல இயக்குனரின் திரைப்படத்தில் திடீர் மாற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

என் ரோஜா நீயே, ஆரத்யாவை தொடர்ந்து அட்டகாசமான பாடலை வெளியிட்ட சமந்தா - விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’  படக்குழு.. – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

என் ரோஜா நீயே, ஆரத்யாவை தொடர்ந்து அட்டகாசமான பாடலை வெளியிட்ட சமந்தா - விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படக்குழு.. – வைரல் வீடியோ உள்ளே..

“தல சொல்லாதடா AK னு சொல்லு..” அலப்பறையை தொடங்கிய சந்தானம்.. – சர்ப்ரைஸாக வெளியான ‘DD returns’ படத்தின் சிறப்பு காட்சி..
சினிமா

“தல சொல்லாதடா AK னு சொல்லு..” அலப்பறையை தொடங்கிய சந்தானம்.. – சர்ப்ரைஸாக வெளியான ‘DD returns’ படத்தின் சிறப்பு காட்சி..