"நெல்சன் IS BACK"- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் பற்றி மனம் திறந்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்! வைரல் வீடியோ

ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் பற்றி பேசிய தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்,dhananjayan said nelson is back in jailer with superstar rajinikanth | Galatta

ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களுக்கும் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த பக்கா ஆக்சன் திரைப்படமாக வரவிருக்கிறது ஜெயிலர் திரைப்படம். முன்னதாக கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் முதல்முறையாக ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்கும்,ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக வரும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். இயக்குனர் நெல்சனின் தனி ஸ்டைலில் டார்க் காமெடி மற்றும் அதிரடி ஆக்சன் கலந்த பக்கா எண்டர்டெய்னர் படமாக ஜெயிலர் திரைப்படம் இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம்  ரிலீஸாகவுள்ளது. கடைசியாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தின் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படமும் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த நிலையில், ஜெயிலர் திரைப்படம் கட்டாயமாக பெரும் வெற்றி பெரும் என சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் ஜெயிலர் படம் பற்றி நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் அந்த வகையில் பேசும் போது, "அண்ணாத்த மற்றும் அதற்கு முன்பு வந்த படங்களை விட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த ஜெயிலர் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருப்பதற்கு காரணம் ரஜினிகாந்த் அவர்கள் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அந்த ஒரு பெரிய ஸ்பீச் மற்றும் இந்த ட்ரெய்லர்.  அந்த ட்ரெய்லரில் வந்த சில விஷயங்கள் நெல்சன் IS BACK, அதாவது BACK என்றால் மிகவும் எண்டர்டெய்னிங்காக  மிகத் தெளிவாக ரஜினிகாந்த் அவர்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். ரஜினிகாந்தின் பலத்தை முழுவதுமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தான் தெரிகிறது.  தவிர எங்கும் குறை இருப்பது போல் தெரியவில்லை மெதுவாக செல்லும் ஒரு படமாக இல்லாமல், ஒரு அழகான ஆக்சன் படமாக ஜெயிலர் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கட்டாயமாக ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு பெரும் வெற்றி படமாக இருக்கும் என  எதிர்பார்க்கிறேன்." என தெரிவித்திருக்கிறார். ஜெயிலர் படம் பற்றிய இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.