விஷாலின் மார்க் ஆண்டனி பட டைம் மெஷின் கான்செப்டின் சுவாரஸ்யமான கதைக்களத்தை விளக்கிய SJசூர்யா! ஸ்பெஷல் பேட்டி இதோ

விஷாலின் மார்க் ஆண்டனி பட கதைக்களத்தை விளக்கிய SJசூர்யா,sj suryah shared about time machine concept of mark antony movie | Galatta

அஜித் குமாரின் வாலி, தளபதி விஜயின் குஷி என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக மக்கள் மனதில் இடம் பிடித்து பின்னர் நடிகராகவும் தொடர்ந்து ஹீரோ - வில்லன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் SJ.சூர்யா அவர்கள் அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். முன்னதாக நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் மிரட்டலான முன்னணி கதாபாத்திரத்தில் SJ.சூர்யா நடித்திருக்கிறார். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வித்தியாசமான டைம் டிராவல் கான்செப்டில் பக்கா ஆக்சன் என்டர்டைனர் திரைப்படமாக உருவாக்கி இருக்கும் இந்த மார்க் ஆண்டனி திரைப்படம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரதியாக பேட்டி கொடுத்த SJ.சூர்யா அவர்கள் நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் அந்த வகையில், மார்க் ஆண்டனி திரைப்படத்தின் கதை களம் என்ன மாதிரியான ஃபேண்டஸி கான்செப்டில் இருக்கிறது என்பது குறித்து விளக்கமாகவும் சுவாரசியமாகவும் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அப்படி பேசுகையில்,

“இது ரொம்பவும் FREAKYயான படம் ஒரு மாதிரி புது genre அப்படி ஒன்றை உருவாக்கி விட்டார் இயக்குனர் ஆதிக்க ரவிச்சந்திரன். மாநாடு 2 என சொல்லலாம் மாநாடு திரைப்படம் டைம் லூப்… ஒன்று நடந்ததே மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கும் டைம் லூப் கான்செப்ட். இப்போது வாழ்க்கையில் ஒரு விஷயம் நடந்து முடிந்து விட்டது உதாரணத்திற்கு ஒருவர் காரில் விபத்து ஏற்பட்டு இறந்து விட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள் ஒரு 1970களில் நண்பர் ஒருவர் பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்த போது காரில் விபத்தில் இறந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் இப்போது 1995ல் இருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள் அப்போது எனக்கு ஒரு போன் கிடைக்கிறது நான் இறந்த காலத்திற்கு போன் செய்து பேச முடியும் என்ற ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதுதான் இதனுடைய கான்செப்ட் இறந்த காலத்திற்கு போன் செய்து இறந்து போன நண்பனை போன் செய்து அழைத்து, “டேய் இன்று நீ அந்த பக்கம் போகாதே உனக்கு விபத்தாகிவிடும்” என சொல்லி அந்த விபத்து தவிர்க்கப்படும் இல்லையா இது கதை இல்லை ஆனால் இது மாதிரியான கான்செப்ட் இது மாதிரியான ஒரு கதையில் இறந்த காலம் , எதிர் காலம் எல்லாம் வைத்து சொல்லும்போது இதை புரியும் படியாக ஒரு படமாக எடுத்து இதில் ஒரு என்டர்டெயின்மெண்ட் , எமோஷன் எல்லாம் கலந்து ஒரு அட்டகாசமான திரைக்கதை அமைத்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன் சார்”  என தெரிவித்து இருக்கிறார். மேலும் மார்க் ஆண்டனி படம் குறித்து பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட SJ.சூர்யா அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.