குழந்தைகளுடன் சுதந்திர தினம் கொண்டாடிய லெஜண்ட் சரவணன்... அடுத்த பட அப்டேட் கொடுத்து ஜெயிலர் பாட்டுக்கு நடனம்! வைரல் வீடியோ

குழந்தைகளுடன் அடுத்த பட அப்டேட் கொடுத்த லெஜண்ட் சரவணன்.legend saravanan shared next movie update with kids | Galatta

குழந்தைகளுடன் இணைந்து சுதந்திர தினத்தை கொண்டாடி அடுத்த புதிய திரைப்படத்திற்கான அப்டேட்டையும் லெஜன்ட் சரவணன் அவர்கள் கொடுத்திருக்கிறார். தமிழ் மக்கள் மத்தியில் தன்னம்பிக்கைக்கும் கடின உழைப்புக்கும் பெரும் எடுத்துக்காட்டாகவும் தமிழ் நாட்டின் முன்னணி தொழில் நிறுவனத்தின் நிறுவனராகவும் திகழும் லெஜண்ட் சரவணன் அவர்கள் தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் தானே நடித்து புதிய ட்ரெண்டை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தன் மீது வீசப்பட்ட பலவிதமான எதிர்மறை விமர்சனங்களை தவிடு பொடியாக்கி, அதைப் பற்றி துளியும் கவலைப்படாதவராய் தொடர்ந்து தனது விளம்பர படங்களில் நடித்து தற்போது பல முன்னணி தொழில் நிறுவனங்களின் நிறுவனர்கள் தங்களது நிறுவனத்திற்கான விளம்பரப் படங்களில் தாங்களே நடிக்க, முக்கிய காரணமாக அமைந்த லெஜண்ட் சரவணன் தமிழக மக்கள் மத்தியில் நம்பிக்கையின் அடையாளமாக மாறினார்.

இதன் தொடர்ச்சியாக தமிழ் திரை உலகில் கதாநாயகனாகவும் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்த லெஜண்ட் சரவணன் தி லெஜன்ட் திரைப்படத்தின் மூலம்  கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். முன்னதாக உல்லாசம் மற்றும் விசில் ஆகிய திரைப்படங்களை இயக்குனர் ஜோடியான இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்க, முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவது போல் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் கடந்த ஆண்டு ஜூலை 28ம் தேதி பேன் இந்தியா படமாக ரிலீஸான தி லெஜண்ட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் மிகப்பெரிய அளவில் இருந்தது. ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் நாளுக்கு நாள் தி லெஜண்ட் திரைப்படத்தை பார்க்கும் ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து தான் வந்தது. மேலும் லெஜண்ட் திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு OTT ரிலீஸுக்கவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க நீண்ட காத்திருப்புக்குப் பிறகு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் காலத்தில் தி லெஜண்ட் திரைப்படம் வெளியானது.

அடுத்ததாக தி லெஜண்ட் நடிக்கும் புதிய படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.  இந்த நிலையில் தற்போது 77 வது சுதந்திர தினத்தை லெஜண்ட் சரவணன் அவர்கள் குழந்தைகளோடு கொண்டாடினார். பள்ளி செல்லும் பிஞ்சு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி சுதந்திர தினத்தை கொண்டாடிய போது தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை லெஜன்ட் சரவணன் அவர்கள் பகிர்ந்து கொண்டார். முன்னதாக  ஒரு சிறுவர், “உங்க லெஜன்ட் படத்தை நான் பார்த்தேன் அங்கிள் ரொம்ப நன்றாக இருந்தது அடுத்த படத்தை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்கள் அங்கிள்” எனக் கேட்க, “கண்டிப்பாக ஒரு கதை.. நல்ல கதையாக அமைய வேண்டும் என்று தான் இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன். இப்போது ஒரு நல்ல கதை கிடைத்திருக்கிறது அதை எவ்வளவு சீக்கிரம் எடுக்க முடியுமோ எடுத்து முடித்துவிட்டு சீக்கிரமாக ரிலீஸ் செய்கிறேன்” என தெரிவித்தார். தொடர்ந்து குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து நடனம் ஆடும்படி கேட்டதும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படத்தில் இடம் பெற்ற ஹுக்கும் பாடலுக்கு குழந்தைகளோடு சேர்ந்து லெஜண்ட் சரவணன் நடனமாடி குழந்தைகளை மகிழ்வித்தார். இந்த அட்டகாசமான நிகழ்வின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் லெஜண்ட் சரவணன் அவர்கள், "அடுத்த படத்தின் அப்டேட்டை குழந்தைகளுடன் பகிர்ந்த தருணம்" என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் லெஜன்ட் சரவணனின் அந்த வீடியோ இதோ…
 

அடுத்த படத்தின் அப்டேட்டை குழந்தைகளுடன் பகிர்ந்த
தருணம்#Legend #Legendsaravanan @yoursthelegend pic.twitter.com/LocspXpDuX

— Legend Saravanan (@yoursthelegend) August 15, 2023