பிரபல தமிழ் நடிகர் RSசிவாஜி காலமானார்... அதிர்ச்சியில் ரசிகர்கள்- உலக நாயகன் கமல்ஹாசனின் உருக்கமான இரங்கல் இதோ!

நடிகர் RSசிவாஜி காலமானார் கமல்ஹாசன் வெளியிட்ட இரங்கல்,veteran tamil actor rs shivaji passed away | Galatta

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர் RS.சிவாஜி திடீரென காலமானார். கடந்த 1981 ஆம் ஆண்டு வெளிவந்த பன்னீர் புஷ்பங்கள் படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய RS.சிவாஜி தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் நடிகருமான சந்தான பாரதி அவர்களின் சகோதரர் ஆவார். தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் RS.சிவாஜி, உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். குறிப்பாக கமல் ஹாசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த விக்ரம், சத்யா, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன், குணா, கலைஞன், மகளிர் மட்டும், பம்மல் கே சம்பந்தம், அன்பே சிவம், உன்னைப் போல் ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்த RS.சிவாஜி அவர்கள் பேசும், “சார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க” என்ற வசனத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. தளபதி விஜயின் பூவே உனக்காக, அஜித்குமாரின் வில்லன், இயக்குனர் மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து, சூர்யாவின் சூரரைப் போற்று, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வந்த கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த கார்கி படத்திலும் நடிகர் RS.சிவாஜி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது நடிகர் RS.சிவாஜி காலமானார் என்ற செய்தி வெளிவந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது 66 வயதில் உயிரிழந்த நடிகர் RS.சிவாஜி அவர்களின் மறைவுக்கு தமிழ் சினிமா ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நமது கலாட்டா குழுமமும் நடிகர் RS.சிவாஜியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

அந்த வகையில் நயன்தாராவுடன் இணைந்து RS.சிவாஜி நடித்த கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான ஜெயிலர் படத்தின் இயக்குனருமான நெல்சன் திலீப் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “RS.சிவாஜி சார் உங்களது ஆத்மா சாந்தி அடைய வேண்டும்... கோலமாவு கோகிலா படத்தின் சமயத்தில் உங்களது அர்ப்பணிப்பையும் நேர்மையையும் நினைத்துப் பார்க்கிறேன்.. அவரது குடும்பத்தாருக்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது இரங்கலை தெரிவித்து இருக்கிறார். அதேபோல் அவரோடு இணைந்து பல படங்களில் பணியாற்றிய உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது நண்பரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை கொள்கிறேன். சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நீடிக்கும்படியான உயிரோட்டத்தை அளிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே பெரிதும் அறியப்பட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என உருக்கமான இரங்கலை பதிவிட்டு இருக்கிறார்  அந்த பதிவுகள் இதோ…
 

எனது நண்பரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை கொள்கிறேன். சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நீடிக்கும்படியான உயிரோட்டத்தை அளிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர்… pic.twitter.com/XEmLhU0nxK

— Kamal Haasan (@ikamalhaasan) September 2, 2023

RIP R.S. Shivaji sir…. Remembering your sincerity and dedication during #kolamaavukokila times, my heartfelt condolences to his family https://t.co/LJUBqj7t7M

— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) September 2, 2023