ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 பட அட்டகாசமான ட்ரெய்லர் இதோ!

ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 பட ட்ரெய்லர் வெளியீடு,raghava lawrence in chandramuki 2 movie trailer out now | Galatta

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பணக்காரன் உழைப்பாளி மன்னன் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் P.வாசு அவர்கள் பாபா திரைப்படத்திற்கு பிறகு ஒரு இடைவெளிக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரை பயணத்தில் மிக முக்கிய படமாக இயக்கிய படம் தான் சந்திரமுகி. முன்னதாக மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான மணிசித்திரதாழ் திரைப்படத்தின் ரீமேக்காக, இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து 2005ல் வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கடந்த 25 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படங்களில் பட்டியலில் அசைக்க முடியாத சாதனை படைத்து உச்சத்தில் சந்திரமுகி படம் இருக்கிறது. 

இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்திரமுகி 2 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும், சந்திரமுகி 2 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஹீரோ கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். கதையின் நாயகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ஷ்ருஷ்டி தாங்கே, சுரேஷ் மேனன், விக்னேஷ் மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளனர். தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில் R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற பாகுபலி மற்றும் RRR திரைப்படங்களின் இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையமைத்துள்ளார். அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையிலான பக்கா ஹாரர் காமெடி ஃபேமிலி என்டர்டெயன்ராக ட்ரீட்டாக வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக சந்திரமுகி 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி & கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

ரிலீசுக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. வைகைப்புயல் வடிவேலு அவர்கள் முருகேசன் கதாபாத்திரத்தில் முதல் பாகத்தில் அசத்திய நிலையில் இந்த பாகத்திலும் அதே முருகேசன் கதாபாத்திரத்தில் வருகிறார். மேலும் “முருகேசன் தான் இந்த அரண்மனையின் சொந்தக்காரர்” என்பது போல குறிப்பிடப்படுவதால் முதல் பாகத்தைப் போலவே சந்திரமுகி 2 படத்திலும் வைகை புயலின் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சந்திரமுகி திரைப்படத்தில் சந்திரமுகி ஆவியாக வந்தது போல இந்த பாகத்தில் சந்திரமுகி மட்டுமல்லாது வேட்டையன் கதாபாத்திரமும் ஆவியாக வருவது போலவும் சந்திரமுகி X வேட்டையன் கதாபாத்திரங்களுக்கு இடையிலான பழிவாங்கும் படலமாக இந்த பாகம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களுக்கு பக்கா ஹாரர் என்டர்டெயின்மென்ட் ட்ரீட்டாக வந்திருக்கும் சந்திரமுகி 2 பட ட்ரெய்லர் இதோ…