தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்சன் கதாநாயகர்களில் மிக முக்கியமான நடிகராக தொடர்ந்து அதிரடி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் விஷால். அந்த வகையில் அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக சமீபத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த வீரமே வாகை சூடும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இதனை அடுத்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் மார்க் ஆண்டனி தரைப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். மேலும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை வருகிற ஏப்ரல் மாதம் லண்டனில் துவங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மீண்டும் காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்துள்ள திரைப்படம் லத்தி. இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் சுனைனா கதாநாயகியாக  நடித்துள்ள லத்தி படத்தில் நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் சாம்.சி.எஸ் லத்தி படத்திற்கு இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர உள்ள லத்தி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஸ்டன்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் ஸ்டன்ட் இயக்கத்தில் தற்போது நடைபெற்று வரும் அதிரடி சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பின் போது நடிகர் விஷால் ரிஸ்க்கான ஸ்டன்ட் செய்து நடித்ததில் காயமடைந்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் லத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது காயமடைந்ததாகவும் சிகிச்சைக்காக கேரளா செல்ல உள்ளதாகவும் மீண்டும் வருகிற மார்ச் முதல் வாரம் கடைசி படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ரிஸ்க்கான ஆக்ஷன் காட்சிகளில் நடித்து காயமடைந்த வீடியோவையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ…