ஐபோன் மற்றும்  விண்டோஸ் யூஸர்களுக்காக டிசைன் மாற்றங்களை டெஸ்ட்டிங் செய்துகொண்டிருக்கிறது வாட்ஸாப்ப் செயலி என்று தகவல் வெளியாகியுள்ளது.

Whatsapp

இன்டர்நெட் உலகில் படித்த படிக்காத எவராயினும் தற்போது மொபைல் கையுமாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாரகள். இந்த மொபைல் உலகில் மிக பிரபலமான மெசேஜிங் சர்விஸ் ஆப்ஸாக இருந்து வரும் WhatsApp, தொடர்ந்து பல புதிய அம்சங்களில் செயல்பட்டு வருகிறது. இப்போது இந்த மெசேஜிங் App-ஆனது நியூ டிஸைன்லே அவுட்டை டெஸ்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் யூஸர்களுக்கான புதிய டிஸைன் மாற்றங்களை தற்போது WhatsApp சோதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் WABetaInfo வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, WhatsApp பிளாட்ஃபார்மானது iOS App மற்றும் யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்ஃபார்ம் UWP - Universal Windows Platform அடிப்படையிலான டெஸ்க்டாப் ஆப்பிற்கான புதிய பீட்டா அப்டேட்ஸ்களை வெளியிட்டுள்ளது. இந்த சமீபத்திய அப்டேட்டுடன் மெட்டாவிற்கு சொந்தமான WhatsApp அதன் பயன்பாட்டின் iOS வெர்ஷனில் சிறிய மாற்றங்களை அறிமுகப்படுத்துவதாக WABetaInfo-வின் அறிக்கை கூறுகிறது.

மேலும் இந்த அறிக்கையின்படி வாட்ஸ்அப் நிறுவனம் சுவிட்ச் கேமரா ஐகானை switch camera icon ரீடிஸைன் செய்துள்ளது. இந்த ஐகான் முந்தைய வெர்ஷனில் இருப்பதை விட சிறியது மற்றும் ட்ரான்ஸ்பரன்ஸி எபெக்ட்டையும் transparency effect இழப்பது தெரிய வருகிறது. இது தவிர இந்த புதிய அப்டேட்டில் போனின் கேலரியில் ரீசன்ட் இமேஜ்களை recent images காட்டும் ஹோரிசான்டல் பாரையும் horizontal bar WhatsApp நீக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இது தவிர ஸ்கிரீனின் அடிப்பகுதியில் உள்ள கேலரி பட்டனையும் whatsapp மாற்றி இருக்கிறது. இந்த அப்டேட்களுடன் இப்போது பட்டன் யூஸர்களின் ஸ்மார்ட் போனில் சேமிக்கப்பட்ட கடைசி படத்தை அதாவது last image saved-ஐ காட்டும். முந்தைய அறிக்கைகளின்படி, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் உள்ள app camera-வை iOS app-ஐ போலவே புதுப்பிக்க WhatsApp திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த அறிக்கை உண்மையானது என்றால் நிறுவனம் விரைவில் இந்த புதிய மாற்றத்தை ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் அறிமுகப்படுத்தலாம். யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்ஃபார்ம் அதாவது UWP என்று வரும் போது லேட்டஸ்ட் பீட்டா அப்டேட் மூலம் வாட்ஸ்அப் டார்க் தீமை இந்தபிளாட்ஃபார்மில் சேர்க்கிறது. சமீபத்தில் WABetaInfo ஷேர் செய்துள்ள ஸ்கிரீன்ஷாட்களின்படி, நீங்கள் Windows-ல் டார்க் தீம் பயன்படுத்தினால், ஆப்ஸ் தானாகவே தீமை டார்க்காக செட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு யூஸர் theme-ஐ மாற்ற விரும்பினால், அவர் WhatsApp Settings பின் General என்பதற்குச் சென்று மாற்றி கொள்ளலாம். இது தவிர app-ன் டின்ட் கலர் இப்போது கிரீனில் உள்ளது. அப்டேட்டிற்கு பிறகு chat bubbles-களுக்கு இடையில் சிறிய ஸ்பேஸ் இருப்பதை யூஸர்கள் கவனிக்க முடியும். மேலே குறிப்பிட்டுள்ள இந்த புதிய அம்சங்கள் beta programs-ல் அங்கமாக இருக்கும் யூஸர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்படுகிறித்து. எனினும் whatsapp நிறுவனம் இதுவரை இந்த வடிவமைப்பு மாற்றங்கள் பற்றிய எந்த அதிகாரப்பூர் விவரங்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.