மருமகளிடம் விளையாட்டாக பாலியல் சில்மிசம் செய்த மாமனாரை போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் அதுவும் திருப்பூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவ 58 வயதான சேகர், அந்த பகுதியிலேயே செருப்பு கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார். 

இவர், தனது மகனுடன் வசித்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகனுக்கு திருமணம் ஆகி, மனைவியும் உள்ளார். 

அதாவது, 58 வயதான சேகரின் மனைவி உயிரிழந்துவிட்டதால், சேகர் தனது மகன் மற்றும் மருமகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். ஆனால், இந்த இளம் தம்பதிக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இன்னும் அமையவில்லை.

இப்படியான சூழலில் தான், மகன் தினமும் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் இருந்து கடைக்கு தினமும் லேட்டாக கிளம்பும் மாமனார் சேகர், தனது மருமகளிடம் தொடர்ந்து அத்து மீறி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில், மாமனாரில் பாலியல் அத்து மீறல் எல்லை மீறி போகவே, கடும் அதிர்ச்சியடைந்த அவரது மருமகள் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, தனது மாமனாரில் பாலியல் அத்து மீறல்கள் குறித்து, தனது கணவரிடம் கூறி அழுது உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மகன், இது குறித்து தனது தந்தையிடம் விசாரித்த போது, “நான் சும்மா விளையாட்டாகத் தான் அப்படியே செய்தேன், நீங்கள் யாரும் எதவும் தவறாக நினைக்க வேண்டாம்” என்று, சொல்லி அப்போது சமாளித்திருக்கிறார். 

ஆனால், தனது மாமனார் தன்னிடம் விளையாட்டாக பாலியல் தொல்லைகள் தரவில்லை என்றும், அவர் வேண்டும் என்றே தான் தொடர்ச்சியாக செய்து வந்தார் என்பதை தெரிந்து கொண்ட அவரது மருமகள், தனது மாமனார் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணின் மாமனாரை கைது செய்து விசாரித்து உள்ளனர். விசாரணைக்குப் பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், “நான் விளையாட்டுக்காகத் தான் அப்படிச் செய்தேன்” என்று, அங்கும் பதில் அளித்திருக்கிறார். 

ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், அந்த மானாரை சிறையில் அடைக்க அதிரடியாக உத்தரவிட்டது. இதனையடுத்து, அவர் அதிரடியாக சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்வம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.