தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் M.சசிகுமார் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக வலம்வரும் M.சசிகுமார் நடிப்பில் கடந்த பொங்கல் வெளியீடாக கொம்பு வச்ச சிங்கம்டா படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அடுத்ததாக, இயக்குனர் அனிஸ் இயக்கத்தில் “பகைவனுக்கு அருள்வாய்”, மற்றும் இயக்குனர் N.V.நிர்மல் குமார் இயக்கத்தில் “நா நா” ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இதனையடுத்து இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் இயக்குனர் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் காமன் மேன்.

காமன் மேன் (COMMON MAN) திரைப்படத்தில், சசிகுமார் உடன் இணைந்து ஹரிப்ரியா கதாநாயகியாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் விக்ராந்த் நடிக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் காமன் மேன் (COMMON MAN) திரைப்படத்திற்கு ராஜா பட்டசர்ஜி ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைக்கிறார். 

முன்னதாக காமன் மேன் படத்தின் டைட்டிலை அறிவிக்கும் விதமாக வெளிவந்த டீசர் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் காமன் மேன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ராந்த் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் புதிய GLIMPSE வீடியோ தற்போது வெளியானது. சற்று முன் வெளியாகி சமூக வலைத்தளங்களின் கவனத்தை ஈர்த்துவரும் GLIMPSE வீடியோ இதோ…