தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தையே கொண்டு தமிழ் திரையுலகின் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தியாக திகழும் தளபதி விஜய் முதல் முறையாக முன்னணி தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்துள்ள திரைப்படம் வாரிசு.

முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. அதே தினத்தில் அஜித் குமாரின் துணிவு திரைப்படம் ரிலீஸாகவுள்ளதால் இந்தப் பொங்கலை ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இதனிடையே வாரிசு திரைப்படத்தை UKவில் வெளியிடும் அகிம்சா என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தீபா நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசும்போது, “நான்கு வாரங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட வாரிசு திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். வழக்கமாகவே இங்கே அஜித் திரைப்படங்களை விட விஜய் திரைப்படங்கள் அதிக வசூல் செய்யும், அஜித் திரைப்படங்கள் 150ஆயிரம்-200ஆயிரம் பவுண்ட் வரை வசூல் செய்தால் விஜய் திரைப்படங்கள் 600 ஆயிரம் பவுண்ட் வரை வசூல் செய்யும் அதாவது மூன்று மடங்கு அதிகமாக வசூல் செய்யும்” என குறிப்பிட்டுள்ளார். அந்த முழு பேட்டி இதோ…