இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமா ரதிகன்களின் ஃபேவரட் ஹீரோயினாகவும் திகழ்பவர் நடிகை த்ரிஷா. முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பாக சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தில் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்த த்ரிஷா அனைத்து ரசிகர்களின் இதயங்களையும் கொள்ளையடித்தார்.

இதனை அடுத்து பொன்னியின் செல்வன்-2 அடுத்த ஆண்டு(2023) ஏப்ரல் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னதாக நடிகர் அரவிந்த்சுவாமி உடன் இணைந்து த்ரிஷா நடித்துள்ள சதுரங்க வேட்டை 2 திரைப்படமும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மலையாளத்தில் மோகன்லால் உடன் இணைந்து ராம்-பார்ட் 1 திரைப்படத்திலும், தமிழில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக தயாராகும் தி ரோடு திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்து வருகிறார்.

இதனிடையே இயக்குனர் A.R.முருகதாஸின் கதையில் எங்கேயும் எப்போதும் & இவன் வேற மாதிரி படங்களின் இயக்குனர் M.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள திரைப்படம் ராங்கி. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இருக்கும் ராங்கி படத்திற்கு C.சத்யா இசையமைத்துள்ளார்.அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் ராங்கி திரைப்படத்திற்கு KA. சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய M.சுபாரக் படத்தொகுப்பு செய்துள்ளார். 

நீண்ட நாட்களாக ரிலீஸுக்காக காத்திருந்த ராங்கி திரைப்படம் இந்த ஆண்டு(2022)  இறுதியில் வருகிற டிசம்பர் 30ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் அட்டகாசமான டீசரையும் வெளியிட்டுள்ளனர். அந்த டீசர் இதோ…
 

She’s coming…! 🤩@trishtrashers starrer 🌟 #RAANGI 😎💥 is releasing on DEC 30, 2022 at the cinemas near you! 📽️#RaangiFromDec30

🎬 @Saravanan16713
📝 @ARMurugadoss
🎶 @CSathyaOfficial
🎥 @shakthi_dop
🤝 @gkmtamilkumaran
🪙 @LycaProductions #Subaskaran pic.twitter.com/tQnTBARpPs

— Lyca Productions (@LycaProductions) December 15, 2022