பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்னர் தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர் இயக்குனர் அட்லீ. ஆர்யா - நயன்தாரா - ஜெய் மூவரும் இணைந்து நடித்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அடலீ, ராஜா ராணி படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 2வது திரைப்படத்திலேயே தளபதி விஜயை இயக்கும் வாய்ப்பை பெற்றார். 

தளபதி விஜய் - அட்லீ கூட்டணியின் முதல் படமாக வெளிவந்த தெறி திரைப்படம் சூப்பர் ஹிட்டாக மீண்டும் இணைந்த இந்த வெற்றி கூட்டணியில் உருவான மெர்சல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மெகா ஹிட் ஆனது. தொடரந்து 3வது முறை இணைந்த இந்த வெற்றிக் கூட்டணியின் அடுத்த படமான பிகில் திரைப்படம் தென்னிந்திய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 

அடுத்தடுத்து வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து வரும் இயக்குனர் அட்லீ தனது வெற்றி பயணத்தின் அடுத்த கட்டமாக தற்போது பாலிவுட்டில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் ஜவான் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். 

முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல நடிகையான ப்ரியாவை இயக்குனர் அட்லீ காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது இயக்குனர் அட்லீ மற்றும் ப்ரியா இருவரும் விரைவில் பெற்றோர்களாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள இயக்குனர் அட்லீ "எங்கள் குடும்பம் வளர்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்" என குறிப்பிட்டு இந்த இனிப்பான செய்தியை அனைவருடனும் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து இயக்குனர் அடலீ மற்றும் ப்ரியாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.  நமது கலாட்டா குழுமம் இயக்குனர் அட்லீ மற்றும் ப்ரியாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
 

Happy to announce that we are pregnant need all your blessing and love ❤️❤️

Wit love
Atlee & @priyaatlee

Pc by @mommyshotsbyamrita pic.twitter.com/9br2K6ts77

— atlee (@Atlee_dir) December 16, 2022