தமிழ் திரையுலகின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவரான நடிகை பிரியாமணி கடைசியாக தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட்டான அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக வெளிவந்த நாரப்பா படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ்,தெலுங்கு,கன்னடம்,இந்தி உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

முன்னதாக தெலுங்கில் ராணா டகுபதி கதாநாயகனாக நடிக்கும் விரட்ட பர்வம் படத்திலும் , கன்னடம் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் சைனைட் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிக்கும் பிரியாமணி, இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் பாலிவுட் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் அடுத்ததாக கன்னடத்தில் பிரியாமணி நடிப்பில் தயாராகி பிற மொழிகளில் விரைவில் திரைக்கு வர உள்ள திரைப்படம் Dr56. இப்படத்தை பிரவீன் ரெட்டி கதை திரைக்கதை எழுதி தயாரித்துள்ளார். ராஜேஷ் ஆனந்தலீலா இயக்கத்தில், நோபின் பால் இசையமைத்துள்ளார்.

த்ரில்லர் படமாக வெளிவரவிருக்கும் Dr56 படத்தில் பிரியாமணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, PR,தீபக் செட்டி, ரமேஷ் பட் , எத்திராஜ், கிரிஸ் ஜாதிக், வீனா பொன்னப்பா, சுவாதி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் Dr56 படத்தின் டீசர் இன்று வெளியானது விறுவிறுப்பான அந்த டீசர் இதோ...