தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் இயக்குனர் வசந்த். இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் வசந்த்தின் திரைப்படங்களிலும் பெண் கதாபாத்திரங்கள் மிக அழுத்தமாக பேசப்படும்.

சமீபத்தில் நெட்ஃபிலிக்ஸில் வெளிவந்த நவரசா வெப் சீரிஸில் பாயாசம் எபிசோடை இயக்குனர் வசந்த் இயக்கியிருந்தார். முன்னதாக இயக்குனர் வசந்த் இயக்கத்தில் உருவான சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டதோடு பல சர்வதேச விருதுகளையும் ஆசிய விருதையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்களான அசோகமித்திரன் ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் கதைகளை தழுவி மூன்று பெண்களின் மூன்று கதைகளை மையப்படுத்திய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்தில் பிரபல நடிகைகள் பார்வதி, லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி மற்றும் காளீஸ்வரி ஸ்ரீனிவாசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, கருணாகரன், ரமா, சுந்தர் ராமு, லிஸ்ஸி ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹம்சா புரோடக்சன்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுக்க பல சர்வதேச விருது விழாக்களில் பங்கேற்று தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. 

விரைவில் Sony LIV OTT களத்தில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தின் புதிய ட்ரைலர் இன்று வெளியானது. அந்த ட்ரைலர் இதோ...