தமிழகத்தின் பல முன்னணி தொலைகாட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த ரியோ ராஜ், விஜய் டிவியில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி சுற்று வரை சிறப்பாக விளையாடினார்.

தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கிய நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் கதாநாயகனாக அறிமுகமானார் ரியோ ராஜ். அந்த வகையில் ரியோ ராஜ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும். 

பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்க, எம்எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர், சந்தானபாரதி, பாலசரவணன், பூர்ணிமா ரவி, முனீஸ்காந்த், டைகர் தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் பிளான் பண்ணி பண்ணனும் படத்திலிருந்து என்னோடு வா பாடல் வீடியோ இன்று வெளியானது. அந்த பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.