தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தையே வைத்திருக்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் ஆச்சார்யா. இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஆச்சாரியா திரைப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் இணைந்து நடித்துள்ளனர்.

தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான லூசிஃபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக  உருவாகும் காட்ஃபாதர்  படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. காட்பாதர் திரைப்படத்தை முன்னணி தமிழ் இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்ததாக தமிழில் தல அஜித் குமார் நடித்து சூப்பர் ஹிட்டான வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா ஷங்கர் படத்தில் நடிக்கிறார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. AK என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் மெஹர் ரமேஷ் இயக்கும் போலா ஷங்கர் திரைப்படத்தின் பட பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.

போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க, சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.  வருகிற நவம்பர் 15ஆம் தேதி முதல் போலா ஷங்கர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இன்று நடைபெற்ற போலா ஷங்கர் திரைப்படத்தின் பட பூஜை புகைப்படங்கள் இதோ...