தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் வினியோகஸ்தர் நடிகர் என பன்முக தன்மைக் கொண்டவராக வலம் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் மிகச் சிறப்பாக பணியாற்றி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். முன்னதாக உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் கடந்த மே மாதம் 20-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தில் தான்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன், சிவாங்கி, இளவரசு, மயில்சாமி, ரமேஷ் திலக், சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரிப்பில் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஆர்ட்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், தீபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிட்ட நெஞ்சுக்கு நீதி திரைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் திரையரங்குகளில் 50 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் 50வது நாள் வெற்றி விழா தற்போது நடைபெற்றது. இதில் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,”சமூக அக்கறையோடு உருவாகி மக்களின் பேராதரவுபெற்ற நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் 50-வது நாள் வெற்றிவிழாவில் இன்று கலந்துகொண்டு, பங்காற்றிய அனைவரும் நினைவுப்பரிசு பெற்றுக்கொண்டோம். முத்தமிழறிஞரின் 'நெஞ்சுக்கு நீதி' நூலை அனைவருக்கும் பரிசளித்து மகிழ்ந்தேன்.” என தெரிவித்துள்ளார். நெஞ்சுக்கு நீதி 50வது நாள் வெற்றி விழா புகைப்படங்கள் இதோ…

சமூக அக்கறையோடு உருவாகி மக்களின் பேராதரவுபெற்ற #NenjukuNeedhi திரைப்படத்தின் 50-வது நாள் வெற்றிவிழாவில் இன்று கலந்துகொண்டு, பங்காற்றிய அனைவரும் நினைவுப்பரிசு பெற்றுக்கொண்டோம். முத்தமிழறிஞரின் 'நெஞ்சுக்கு நீதி' நூலை அனைவருக்கும் பரிசளித்து மகிழ்ந்தேன்.@BoneyKapoor @Arunrajakamaraj pic.twitter.com/l6h1a79iSt

— Udhay (@Udhaystalin) July 10, 2022