பல கோடி தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் முன்னணி நட்சத்திர நாயகனாகவும் வலம் வரும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வலிமை. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று & நேர்கொண்டபார்வை படங்களை தொடர்ந்து இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான வலிமை படத்தில் காவல்துறை அதிகாரியாக அஜித்குமார் நடித்திருந்தார்.

முன்னதாக நேர்கொண்டபார்வை மற்றும் வலிமை திரைப்படங்களில் இணைந்த போனிகபூர்-அஜித் குமார்-H.வினோத்-நீரவ்ஷா கூட்டணியில் தற்போது மூன்றாவதாக தயாராகி வரும் திரைப்படம் #AK61. சமீபத்தில் தொடங்கப்பட்ட #AK61 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் #AK62 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அஜித் குமார் தற்போது ஐரோப்பாவில் தனது வழக்கமான பைக் ரைடிங் ஈடுபட்டுள்ளார்.

முன்னதாக ஐரோப்பாவை சுற்றி பைக் ரைடிங் செய்த அஜித் குமாரின் புகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகி வந்த நிலையில் தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ரசிகர்களோடு அஜித்குமார் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியானது. தனது ரசிகருக்கு T-Shirt-ல் அஜித் குமார் ஆட்டோகிராப் போடும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

Latest video of #Ajith sir#AjithKumar #AK61 pic.twitter.com/mrSSd5XCUY

— Ajith Network (@AjithNetwork) July 11, 2022