தன்னுடைய நிறுவனத்தின் விளம்பர படங்களில் தானே நடித்து தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் அடைந்த தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் லெஜண்ட் சரவணன் அவர்கள் தனது விளம்பர படங்களை தாண்டி தற்போது தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அந்தவகையில் லெஜன்ட் சரவணன் நடித்துள்ள தி லெஜண்ட் திரைப்படம் தயாராகியுள்ளது.

தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடித்துள்ள, தி லெஜண்ட் திரைப்படத்தை பிரபல இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்கியுள்ளனர். தி லெஜண்ட் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடிக்க, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் & மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள தி லெஜண்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற ஜூலை 28ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. தி லெஜண்ட் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை முன்னணி தயாரிப்பாளர் G.N.அன்புச்செழியன் அவர்களின் கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 800 திரையரங்குகளில் தி லெஜண்ட் திரைப்படம் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தி லெஜண்ட் திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமத்தை AP INTERNATIONAL நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Happy to be Associated with #TheLegendSaravanaStoresProduction for #TheLegendSaravanan Starring #TheLegend for Entire Worldwide Excluding India Theatrical Release#TheLegend #TheLegendFromJuly28 @jdjeryofficial @Jharrisjayaraj pic.twitter.com/egLrNaJhMt

— AP International (@APIfilms) July 11, 2022