தமிழ் சினிமாவின் பிரபல இளம் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை அம்மு அபிராமி பல திரைப்படங்களில் குறிப்பிடப்படும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர். குறிப்பாக தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், அசுரன் ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இதனிடையே இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில் அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்துள்ள  பேட்டரி திரைப்படம் விரைவில் ரிலீசாக தயாராகிவருகிறது.

செங்குட்டுவன் கதாநாயகனாக நடிக்கும் பேட்டரி திரைப்படத்தில் தீபக் செட்டி, M.S.பாஸ்கர், யோக் ஜபீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். K.G.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் பேட்டரி திரைப்படத்திற்கு ராஜேஷ்குமார் படத்தொகுப்பு செய்ய, ஹரி தினேஷ் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் பேட்டரி திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அம்மு அபிராமியின் பேட்டரி திரைப்படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் சற்று முன்பு வெளியானது. சமூகவலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ள பேட்டரி திரைப்படத்தின் ட்ரைலர் இதோ…