தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகவும் தென்னிந்திய திரையுலகின் குறிப்பிடப்படும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். முன்னதாக சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸான சுழல் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார்.

சஸ்பென்ஸ் த்ரில்லர் வெப்சீரிஸாக வெளிவந்த சுழல் வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தொடர்ந்து துருவநட்சத்திரம், மோகன்தாஸ், தீயவர் கொலைகள் நடுங்க உள்ளிட்ட படங்கள் வெளிவரவுள்ளன.

இதனிடையே வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கின்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் திரைப்படம் டிரைவர் ஜமுனா. 18 ரீல்ஸ்ஸ் சார்பில் S.P.சௌத்ரி தயாரித்துள்ள டிரைவர் ஜமுனா திரைப்படத்தில் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, stand-up காமடியன் அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் வாலாஜாபாத்தில் இருந்து ஈசிஆர் செல்லும் 90 நிமட த்ரில்லான பயணத்தை கொண்ட ஆக்ஷன் திரில்லர் படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் வெளிவரவுள்ள டிரைவர் ஜமுனா திரைப்படத்திற்கு கோகுல் பயனாய், ஒளிப்பதிவில் R.ராமர் படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 

That’s a wrap 🤗🤗 Can’t wait for u all to cya soon in theatres #driverjamuna
If u haven’t watched d trailer checkout https://t.co/F2njj0k1hb @kinslin @GhibranOfficial @gokulbenoy @SPChowdhary3 pic.twitter.com/uPTfRwPvCg

— aishwarya rajesh (@aishu_dil) July 11, 2022