“கட்டிக்க..” அடம் பிடிக்கும் நண்பனின் மனைவி.. “வச்சிக்கிறேன்..” டிம்கி கொடுக்கும் கணவனின் நண்பன்..!

“கட்டிக்க..” அடம் பிடிக்கும் நண்பனின் மனைவி.. “வச்சிக்கிறேன்..” டிம்கி கொடுக்கும் கணவனின் நண்பன்..! - Daily news

நண்பனின் மனைவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்யக்கொள்ள மறுப்பதாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கோவையில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர், அவரது கணவருடன் வசித்து வந்தார்.

அதாவது, அந்த இளம் பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். 

அந்த கணவர் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். கணவரின் தொழிலுக்கு அவரது மனைவியும் உதவியாக இருந்து வந்திருக்கிறார்.

அப்போது, அந்த கணவரின் கடைக்கு அங்குள்ள போத்தனூரைச் சேர்ந்த சங்கர் என்பவர் அடிக்கடி வந்து சென்றிருக்கிறார்.

இந்த சங்கர், சென்னை மற்றும் கோவையில் கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்த சங்கர் அந்த கணவரின் நண்பர் என்பதால், அடிக்கடி அந்த கடைக்கு வந்து சென்ற நிலையில், இந்த சங்கருக்கும் அந்த நண்பரின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 

இந்த பழக்கம் காரணமாக, அந்த கணவர் கடையில் இல்லாத நேரமாக பார்த்து சங்கர் கடைக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால், அவரின் மனைவி, சங்கருடன் தொடக்கத்தில் நட்பு ரீதியில் பழகிய நிலையில், ஒரு நாள் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி அங்குள்ள ஒரு பெரிய ஹோட்டலுக்கு அந்த பெண்ணை, சங்கர் அழைத்துச் சென்று உள்ளார். 

அந்த பெரிய ஹோட்டலில் அவர்கள் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இதையடுத்து அந்த புகைப்படத்தை காட்டி, சங்கர் தனது நண்பனின் மனைவியை மிரட்டத் தொடங்கி இருக்கிறார்.

அத்துடன், அந்த போட்டோவை காட்டி நண்பனின் மனைவியை மீண்டும் ஹோட்டலுக்கு வருமாறு கட்டாயப்படுத்திய சங்கர், அதன்படி அந்த பெண் அங்கு வந்ததும் அந்த பெண்ணை அங்கு தனியாக வைத்து மிரட்டி மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

அந்த பாலியல் பலாத்காரத்தை, அந்த பெண்ணுக்கேத் தெரியாமல் அதனை செல்போனில் வீடியோவும் எடுத்து வைத்திருக்கிறார். 

அதன் தொடர்ச்சியாக, “உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்றும், நீ உன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு வந்து விடு, நான் என்னை திருமணம் செய்து கொள்கிறேன்” என்றும், சங்கர் தனது நண்பனின் மனைவியிடம் வாக்குறுதி அளித்து, அவருக்கு ஆசையும் காட்டியிருக்கிறார்.

இதனை நம்பிய அந்த பெண்ணும், தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்த நிலையில், தனது கணவரின் நண்பனுடன், அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்.

இந்த விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அந்த பெண்ணிடம் திருமணம் செய்வதாக கூறியே, பல முறை அந்த பெண்ணை அவர் பாலியல் உறவு கொண்டு வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில், “திருமணம் செய்தால் மட்டுமே உன்னிடம் பாலியல் உறவில் ஈடுபடுவேன்” என்று, அந்த பெண் கூறவே, “நீ வர முடியாது என்றால், உனது ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன்” என்று, மீண்டும் அந்த பெண்ணை மிரட்டி தனது பாலியல் இச்சைக்கு அவர் தொடர்ந்து பணிய வைத்திருக்கிறார். 

பின்னர், அந்த பெண்ணிடம் இருந்த நகைகள் மற்றும் பணத்தை எல்லாம் ஏமாற்றி வாங்கிக்கொண்டு, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து ஏமாற்றி வந்திருக்கிறார்.

இதனால், பாதிக்கப்பட்ட அந்த பெண், கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சங்கர் மீது பாலியல் புகார் அளித்து இருக்கிறார். 

பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீசார், சங்கரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம், கோவையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

Leave a Comment