ஜப்பான் முன்னாள் பிரதமர் துப்பாக்கியல் சுடப்பட்டு உயிரிழந்ததாக மாறி மாறி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சுட்ட நபரை அந்நாட்டு போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அந்நாட்டில் பிரதமராக பொறுப்பில் இருந்தவர் ஆவர்.

ஏற்கனவே, ஷின்சோ அபே, ஜப்பான் நாட்டில் பிரதமராக இருந்த போது, அவரது உடல் நிலை அடிக்கடி பாதிக்கப்பட்ட போதுதான், தனது பிரதமர் பதவியில் இருந்து அவர், தானாக முன் வந்து விலகியதாகவும் கூறப்படுவதுண்டு.

பிரதமர் பதவியை விட்டு விலகிய பிறகு, அவர் ஓய்வில் இருந்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

இப்படியான சூழலுக்கு மத்தியில் தான், ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, அந்நாட்டின் நரா என்னும் பகுதியில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

அதாவது, அந்த பகுதியில் சாலை ஓரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஷின்சோ அபே, பேசிக்கொண்டிருந்து உள்ளார்.

அப்போது, துப்பாக்கி குண்டு ஷின்சோ அபே வின் மீது, அந்த மேடையின் கீழே நின்றுக்கொண்டிருந்த ஒரு இளைஞன், திடீரென துப்பாக்கியால் சுட்டி உள்ளான்.

இதனால், அந்த கூட்டத்தில் இருந்த பொது மக்கள் பலரும் அங்கும் இங்கும் சிதறி ஓடிய நிலையில், அந்த கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞன் மறைத்து இருந்து துப்பாக்கியை கொண்டு அபேவை சுட்டுக்கொண்டு இருந்து உள்ளார்.

அப்போது, ஷின்சோ அபேவின் முதுகு பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உள்ளது. இதனால், ஷின்சோ அபே குண்டடிப்பட்டு அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

இதனால், அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், உடனடியாக ஓடிச் சென்று படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்த ஷின்சோ அபேயை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

மருத்துவமனையில் ஷின்சோ அபேக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் எதுவும் இன்றி உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே இருப்பதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே நேரத்தில், ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, துப்பாக்கியால் சுட்ட நபரை, ஜப்பான் போலீசார் துரத்திச் சென்று அவரை அங்கேயே மடக்கியும் பிடித்தனர். 

அத்துடன், ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுடுவதற்காக, அந்த இளைஞனே, தானாக துப்பாக்கி குண்டுகளை தயாரித்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

மேலும், பிடிபட்ட அந்த நபரின் பெயர் யமகாமி டெட்சுயா என்பவரும், அவருக்கு தற்போது 40 வயது என்றும் கூறப்படுகிறது. இதனால், அவரது உண்மை தன்மை குறித்து அந்நாட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே போல், மடக்கப் பிடித்த யமகாமியை அங்குள்ள ஒரு ரகசியமான இடத்தில் வைத்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும், “இந்த துப்பாக்கி சூட்டிற்கு என்ன காரணம்?” என்பது குறித்தும் அந்நாட்டு போலுசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

குறிப்பாக,  ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மருத்துமனையில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியான சிறிது நேரத்தில், அவர் உயிரிழந்து விட்டதாகவும் மற்றொரு தகவல்களும் வெளியாகி, அந்நாட்டு மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.