தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகவும் தென்னிந்திய திரையுலகில் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாகவும் திகழும் நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தார். அடுத்த ஆண்டு(2023) ஏப்ரல் 28-ம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படமும் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக த்ரிஷா தமிழில் ஆக்சன் த்ரில்லர் படமான தி ரோட் படத்தில் நடித்து வரும் த்ரிஷா தொடர்ந்து மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம் பார்ட் 1 படத்திலும் நடித்து வருகிறார். அடுத்ததாக ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் எக்கசக்கமான எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் இணையும் தளபதி 67 படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். 

இதனிடையே இயக்குனர் A.R.முருகதாஸின் கதையில், எங்கேயும் எப்போதும் & இவன் வேற மாதிரி படங்களின் இயக்குனர் M.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள திரைப்படம் ராங்கி. அனஸ்வரா ராஜன், ஜான் மகேந்திரன், லிஸ்ஸி ஆண்டனி மற்றும் கோபி கண்ணதாசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் ராங்கி திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

KA. சக்திவேல் ஒளிப்பதிவில், M.சுபாரக் படத்தொகுப்பு செய்ய C.சத்யா இசையமைத்துள்ள ராங்கி திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அவர்கள் தயாரித்துள்ளார்.த்ரிஷாவின் பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் ராங்கி திரைப்படம் நீண்ட காத்திருப்பதற்குப் பிறகு வருகிற டிசம்பர் 30-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்நிலையில் ராங்கி திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அசத்தலான அந்த வீடியோ இதோ…