ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் அடுத்த ஆண்டு (2023) பொங்கலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். காரணம் வீரம் மற்றும் ஜில்லா திரைப்படங்களுக்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப்பின் தளபதி விஜய் மற்றும் அஜித் குமாரின் வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்கள் ஒரே நாளில் ஜனவரி 12ம் தேதி ரிலீஸாகின்றன.

குறிப்பாக வாரிசு திரைப்படத்தின் ரிலீஸுக்காக விஜய் ரசிகர்கள் இன்னும் ஆவலோடு காத்திருக்க காரணம் வாரிசு ரிலீசுக்கு பின் தளபதி 67 படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவர இருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தது தான். ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் தளபதி 67 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்லலாம்.

சமீபத்தில் தளபதி 67 திரைப்படத்தின் படப்பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற நிலையில் தளபதி விஜயுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை த்ரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே நமது கலாட்டா ப்ளஸ் சேனலில் நடைபெற்ற தமிழ் சினிமா ROUND TABLE 2022 நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 67 திரைப்படத்தில் மேலும் இரண்டு இயக்குனர்கள் பணியாற்றில் இருப்பது குறித்து பேசியுள்ளார். அப்படி பேசுகையில்,

“நான் வசனங்களுக்காக எழுத்தாளர்களின் உதவியை பெற்றுக் கொள்கிறேன். அந்த வகையில் மாநகரம் திரைப்படத்திற்கு கார்த்திக் யோகி வசனங்களில் பணியாற்றினார். கைதி திரைப்படத்திற்கு பொன் பார்த்திபன் அவர்கள் வசனங்களில் பணியாற்றினார். அதேபோல் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்களில் ரத்னகுமார் பணியாற்றினார். அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் ரத்னகுமாரும் பணியாற்றுகிறார் அவரோடு சேர்ந்து ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குனர் தீரஜ் அவர்களும் பணியாற்றுகிறார்” என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். கலாட்டா ப்ளஸ் 2022 தமிழ் சினிமா ROUND TABLE நிகழ்ச்சியின் முழு வீடியோ இதோ…