பிரம்மாண்டமாக ஜனவரி 11 அன்று பொங்கல் தினத்தையொட்டி வெளியாகவிருக்கும் துணிவு படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் முன்னதாக வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இறுதிகட்ட விளம்பர பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும் இந்த சூழலில் துணிவு படத்தின் இயக்குனர் எச் வினோத் நமது கலாட்டா மீடியா பேட்டியில் கலந்து கொண்டார். இதில் துணிவு படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

வங்கி கொள்ளையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் துணிவு படத்தின் டிரைலரில் நடிகர் அஜித் கடலுக்கு நடுவே ஜெட்ஸ்கி ஓட்டுவது போல் சேஸிங் காட்சி இடம் பெற்றிருக்கும் அதில் அவர் அஜித் டூப் பயன்படுத்தியுள்ளார் என்ற விமர்சனம் ஒருபுறம் எழுந்தது. இதுகுறித்து  துணிவு பட இயக்குனர் எச்.வினோத் அவர்களிடம் பேசுகையில்,

அவர், “அஜித் சாருக்கு வேகமாக ஒட்டுவது பிடிக்கும். அவர ஃபிரேமுக்குள் பிடிப்பது கஷ்டம். அவர் எங்களிடமிருந்து 30,40 அடி தூரத்தில் இருப்பார் அந்த சூழலில் அவர தொடர்பு கொள்ளவும் முடியாது. அதன்பின் அந்த நிலையில் படக்குழு இருந்த போட்டின் வேகத்தை சாருடைய வேகத்துடன் ஒத்துபோக வைத்தோம் . அலைகளினால் ஒளிப்பதிவில் சிரமம் இருந்தது. அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நாங்களும் சாரும் அந்த சூழலை ஒரு புரிதலோடு நகர்த்தி சென்றோம் ஜெட்ஸ்கி ஓட்டுவது சுலபம். அதை டூப் என்று சொல்பவர்களும் அதை ஓட்டலாம்.”  என்று குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் அஜித் வேகமாக கார் ஓட்டுவதிலும் பைக் ஓட்டுவதிலும் ஏன் அதிவேக படகு ஓட்டுவதிலும் திறமையானவர் என்று பலரும் அறிந்ததே. படத்தில் சிரமமான சண்டை காட்சிகளையும் தானாக முன்வந்து செய்ய கூடிய நடிகரும் ஆவர். அதன்படி அவரின் பில்லா, பில்லா 2, ஆரம்பம், மங்காத்தா, வீரம், விவேகம், வலிமை  என பல படங்களில் ஆபத்தை எளிதாக கடந்து அதில் உழைப்பை கொடுப்பவர். இதற்காகவே அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நிச்சயம் துணிவு படத்திலும் அவரது உழைப்பு தலைசிறந்து இருக்கும் என்பதே ரசிகர்களின் உறுதியான நம்பிக்கையாக உள்ளது.

துணிவு படங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் எச் வினோத் பகிர்ந்து கொண்ட முழு காணொளி இதோ.