பல கோடி ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் உச்ச நட்சத்திர நாயகன் தளபதி விஜய், மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையும் தளபதி 67 திரைப்படம் இந்திய திரை உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த அதிரடியான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.

முன்னதாக முதல் முறை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் வாரிசு திரைப்படத்தை முன்னணி தயாரிப்பாளர் திரு ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தயாரித்துள்ளார்.கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.

தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள வாரிசு படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. 

முன்னதாக வெளிவந்த வாரிசு திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வைரல் ஹிட்டாகி இருக்கின்றன. அந்த வகையில் முன்னணி பாடகி KS.சித்ரா அவர்களின் குரலில் வெளிவந்த Soul Of Varisu பாடல் தற்போது உலக அளவில் சாதனை படைத்துள்ளது. 

உலக அளவில் அதிகமாக ரசிகர்களான பார்க்கப்பட்ட பாடலாக, ட்விட்டர் மற்றும் Xfinity Mobile நிறுவனங்கள் வழங்கும் பிரபலமான பில் போர்ட்’ஸ் வெளியிட்டுள்ள HOT TRENDING SONGS தரவரிசை பட்டியலில் வாரிசு திரைப்படத்தின் SOUL OF VARISU பாடல் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
 

#SoulOfVarisu reaches No. 1 on @billboard's #HotTrendingSongs Powered by @Twitter chart 🤩

Thank you @MusicThaman & @KSChithra mam for giving us this wonderful song ❤️

▶️ https://t.co/ZMAGrUg4KC#Thalapathy @actorvijay sir @SVC_official @directorvamshi @iamRashmika pic.twitter.com/yCVSXIA9SE

— Sri Venkateswara Creations (@SVC_official) December 29, 2022